2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

லங்கா SSL இனால் முட் கம்பி (barbed wire) அறிமுகம்

S.Sekar   / 2021 நவம்பர் 26 , மு.ப. 07:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

லங்கா ஸ்பெஷல் ஸ்டீல் லிமிடெட் (லங்கா SSL), இலங்கையின் ஒரே SLS சான்றிதழ் பெற்ற முட் கம்பி (barbed wire) களை அறிமுகம் செய்துள்ளதாக அறிவித்துள்ளது. அதனூடாக இலங்கையில் SLS சான்றிதழ் பெற்ற ஒரே கல்வனைஸ் செய்யப்பட்ட கம்பிகள் (Gi) உற்பத்தியின் முன்னோடி எனும் தனது நிலையை மேலும் உறுதி செய்துள்ளது.

தரம் மற்றும் புத்தாக்கம் தொடர்பில் தொடர்ச்சியாக கவனம் செலுத்தும் நிறுவனம், பல்வேறு ஆய்வுகள் மற்றும் அபிவிருத்தி செயற்பாடுகளில் பெருமளவு முதலீடுகளை மேற்கொண்டுள்ளது. 2019 ஆம் ஆண்டில் மொரட்டுவ பல்கலைக்கழகத்துடன் இணைந்து முன்னெடுத்திருந்த விஞ்ஞானபூர்வ ஆய்வினூடாக, நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் காணப்படும் துருப்பிடிக்கும் வீதங்களை கவனத்தில் கொண்டு, கல்வனைஸ் செய்யப்பட்ட கம்பிகளின் (Gi) ஆயுள் காலம் 25 வருடங்களை விட அதிகமானதாக அமைந்திருக்கும் என்பது கண்டறியப்பட்டிருந்தது.

ISO 9001: 2015, ISO 45001:2018 சான்றிதழைப் பெற்ற லங்கா SSL கம்பனி, நாட்டின் கல்வனைஸ் செய்யப்பட்ட கம்பிகள் உற்பத்திப் பிரிவில் முன்னோடியாகத் திகழ்வதுடன், மூன்று தசாப்த காலமாக வாடிக்கையாளர்கள் மத்தியில் தொடர்ச்சியாக நன்மதிப்பையும் வென்றுள்ளது. உலகின் சிறந்த வர்த்தக நாமங்களுக்கு நிகரானதாக இந்நிறுவனத்தின் உற்பத்திகள் அமைந்திருப்பதுடன், சபுகஸ்கந்த பகுதியில் அமைந்துள்ள நவீன வசதிகள் படைத்த தொழிற்சாலையினால் உற்பத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. நிறுவனத்தின் Gi கம்பிகளுக்கு SLS 139:2003 தரச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதுடன், அதன் முட் கம்பிகளுக்கும் SLS 31:1988 சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

லங்கா SSL இன் பிரதம நிறைவேற்று அதிகாரியும் பணிப்பாளருமான பிரவீன் டி சில்வா கருத்துத் தெரிவிக்கையில், “கல்வனைஸ் செய்யப்பட்ட முட் கம்பிகள் தொழிற்துறையில் முன்னோடி எனும் வகையில், 25 வருடங்களாக லங்கா SSL தொழிற்துறையை மேம்படுத்தும் பணிகளை முன்னெடுத்துள்ளதுடன், அதற்கமைய தனது தயாரிப்புகளின் தர நியமங்களையும் மேம்படுத்தி உயர் தரம் வாய்ந்த தயாரிப்புகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்கியுள்ளது. நாட்டில் SLS-31 சான்றிதழைப் பெற்ற ஒரே முட்கம்பிகளாக எமது முட்கம்பிகள் காணப்படுகின்றன என்பதை மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றோம். எமது பிரிவுகள் மற்றும் சந்தைகளை மேம்படுத்துவது தொடர்பில் நாம் கவனம் செலுத்துவதுடன், தரம், புத்தாக்கம் மற்றும் நிலைபேறாண்மை ஆகியவற்றுக்கு முன்னுரிமையளித்து எமது செயற்பாடுகளை மேற்கொள்கின்றோம்.” என்றார்.

எதிர்வரும் மாதங்களில் நிறுவனம் தனது தயாரிப்புகளை விரிவாக்கம் செய்யத் திட்டமிட்டுள்ளது. கடந்த ஆண்டில் TATA Steel லிமிடெடின் சர்வதேச கம்பிகள் பிரிவுடனான பங்காண்மையை வலிமைப்படுத்தியிருந்தது. அதனூடாக நாடு முழுவதிலும் தரமான கம்பிகள் விநியோகத்தில் நீண்ட காலமாக பேணியிருந்த ஏக முகவர் மற்றும் விநியோகத்தருக்கான அந்தஸ்த்தை தொடர்ந்தும் தக்க வைத்திருந்தது.

மேலும், லங்கா SSL இனால் ‘Permaweld’ வர்த்தக நாமத்திலமைந்த வெல்டிங் கம்பிகள் சகல வெல்டிங் பயன்பாட்டுக்கும் அறிமுகம் செய்யப்பட்டிருந்தது. நாடு முழுவதிலும் லக்சபான பற்றரிஸ் பிஎல்சியின் ஹார்ட்வெயார் விநியோக பிரிவினூடாக விநியோக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

ஒப்பற்ற சேவைகளை வழங்குவதற்கான நிறுவனத்தின் அர்ப்பணிப்பான செயற்பாடுகளுக்கு கௌரவிப்புகளும் வழங்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டின் மார்ச் மாதத்தில், நிறுவனத்துக்கு CNCI Achiever விருதுகள் 2020 இல் மிகப் பெரிய பிரிவில் (உற்பத்தித் துறை) தேசிய தங்க விருது வழங்கப்பட்டதுடன், தொழிற்துறை சிறப்புக்கான சிறந்த பத்து நிறுவனங்களில் ஒன்றுக்கான விருதும் வழங்கப்பட்டிருந்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .