2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

’லங்கா ரெமிட்’ உடன் கொமர்ஷல் வங்கி இணைவு

S.Sekar   / 2022 பெப்ரவரி 21 , மு.ப. 06:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டிற்கு பணம் அனுப்புவதுக்கு வசதியாக இலங்கை மத்திய வங்கியின் முயற்சிக்கு ஆதரவளிக்கும் வகையில், 'லங்கா ரெமிட்' எனும் தேசிய பணம் அனுப்பும் மொபைல் செயலியுடன் இணைந்துள்ளதாக கொமர்ஷல் வங்கி அறிவித்துள்ளது.

பங்காளி வங்கிகளின் ஆதரவுடன் LankaClear (Pvt) Ltd. ஆல் உருவாக்கப்பட்ட, இந்த மொபைல் அப்ளிகேஷன், வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களுக்கு தற்போதுள்ள பணம் அனுப்பும் முறைகளுக்கு நேரடி அணுகலை வழங்குகிறது. மேலும் இலங்கைக்கு பணம் அனுப்புவதற்கு மிகவும் வசதியான மற்றும் செலவு குறைந்த முறைகளைத் தெரிவுசெய்ய அவர்களுக்கு உதவுகிறது.

கொமர்ஷல் வங்கியானது 2003 ஆம் ஆண்டில் eRemittance சேவையில் முன்னோடியாக இருந்ததுடன் 2016 இல் இலங்கையின் முதல் பணம் அனுப்பும் அட்டையை அறிமுகப்படுத்தியது. அத்துடன், அவசரநிலைகளின்போது முழுமையான ரொக்க முற்பணக் கடன் வசதியையும் அறிமுகப்படுத்தியது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .