2025 ஜூலை 25, வெள்ளிக்கிழமை

லண்டனில் இலங்கை தேயிலை

Editorial   / 2017 ஜூலை 19 , மு.ப. 04:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரித்தானியாவின் அரச அதிகாரிகள், சர்வதேச நிறுவனங்கள், அரசசார்பற்ற அமைப்புகள் மற்றும் தனியார் வியாபார அமைப்புகள் போன்றன லண்டன் நகரில் நடைபெற்ற இலங்கைத் தேயிலை சர்வதேச கொண்டாட்ட நிகழ்வில் பங்கேற்றிருந்தன. லண்டன் நகரில் அமைந்துள்ள இலங்கை உயர் ஸ்தானிகராலயத்தின் மூலமாக இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஜுலை மாதம் 6ம் திகதி நடைபெற்ற இந்நிகழ்வை கொழும்பு தேயிலை விற்பனையாளர் சம்மேளனம் மற்றும் இலங்கை தேயிலை சபை ஆகியன இணைந்து முன்னெடுத்திருந்தன. 

பிரித்தானியாவுக்கான இலங்கையின் உயர் ஸ்தானிகர் அமரி விஜேவர்தன தனது வரவேற்புரையின் போது, ஜேம்ஸ் டெய்லர் மேற்கொண்டிருந்த பெறுமதி வாய்ந்த பங்களிப்பு குறித்து குறிப்பிட்டிருந்தார். இலங்கையில் சுமார் 150 வருடங்களுக்கு முன்னதாக தேயிலைச் செய்கையை ஆரம்பித்தவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், நாட்டின் தேயிலைத்துறையின் அபிவிருத்திக்கு பிரித்தானியா வழங்கியிருந்த பங்களிப்பு தொடர்பிலும் விளக்கமளித்திருந்தார். இலங்கைத் தேயிலையின் உயர் தரம் மற்றும் வெவ்வேறு சுவைத்தெரிவுகள் போன்றவற்றுக்காக உலகளாவிய ரீதியில் பெருமளவு வரவேற்பும் மதிப்பும் காணப்படுகின்றமை பற்றியும் குறிப்பிட்டிருந்தார்.

ஒன்றுகூடியிருந்தோர் மத்தியில் சர்வதேச தேயிலை சபையின் தலைவர் இயன் கிப்ஸ் கருத்துத்தெரிவிக்கையில், சர்வதேச தேயிலை துறையில் இலங்கை முக்கிய பங்களிப்பை வழங்கி வருகிறது. கறுப்புத் தேயிலை உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் ஈடுபடும் முன்னணி நாடாகவும் திகழ்கிறது. உலகுக்கு பெறுமதி சேர்க்கப்பட்ட தேயிலையை ஏற்றுமதி செய்வதிலும் இலங்கை முக்கிய இடத்தை வகிக்கிறது என்றார்.

இந்நிகழ்வின் போது, இலங்கைத் தேயிலையின் பிரித்தானிய தூதுவர் மைக் பன்ஸ்டன் உரையாற்றியிருந்தார். கடந்த 150 வருடங்களில் இலங்கை தேயிலை கடந்து வந்த வரலாற்று சாதனைகள் பற்றிய விவரங்களை அவர் சமர்ப்பித்திருந்தார். 19 ஏக்கர் தேயிலைச் செய்கையுடன் ஆரம்பித்த இந்தத்துறை, பல சாதனைகளுடன் நீண்ட தூரம் பயணித்துள்ளது. சமகாலத்தில் இந்தத்துறை எதிர்நோக்கியுள்ள பிரதான சவால்களில், சர்வதேச தேயிலைத்துறையில் தாம் எய்தியுள்ள உயர்ந்த ஸ்தானத்தைத் தொடர்ந்து தக்கவைத்துக்கொள்வதாகும். இதைத் தக்கவைத்துக்கொள்ள முறையான செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .