Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2016 ஒக்டோபர் 02 , பி.ப. 05:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பு, வாகரையில் அமைந்துள்ள கட்டுமுறிவு குளம் கிராமத்தில் நீர் மற்றும் தூய்மையாக்கல் செயற்றிட்டம் ஒன்றை முன்னெடுப்பதற்கு, வேர்ல்ட் விஷன் லங்கா லிமிட்டெடுக்கு நிதி உதவியை வழங்கியிருந்தது.
3 மில்லியன் ரூபாய் நன்கொடையின் மூலமாக, வேர்ல்ட் விஷன் லங்கா அமைப்புக்கு சுமார் 220 குடும்பங்களுக்கு பாதுகாப்பான குடிநீர் வசதியைப் பெற்றுக்கொடுப்பதுக்கு வாய்ப்புகள் வழங்கப்படும்.
இதில் 786 வயது வந்தவர்கள் மற்றும் 394 சிறுவர்கள் ஆகியோர் உள்ளடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. கட்டுமுறிவுகுளம் கிராமத்தை பொறுத்தமட்டில், நீர் என்பது மாபெரும் பிரச்சினையாக அமைந்துள்ளது. முழுக்கிராமத்துக்கும் பயன்படுத்தக்கூடிய வகையில், ஐந்து கிணறுகளும் இரு குழாய் கிணறுகளும் மாத்திரமே அங்கு அமைந்துள்ளன.
தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் ஆலோசனைக்கமைய நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த நீர் விநியோகத்திட்டம், வரட்சியான காலப்பகுதியிலும், இந்தக் கிராமத்தைச் சேர்ந்த குடும்பங்களுக்கு நீரைப்பெற்றுக்கொடுக்கக்கூடிய வகையில் அமைந்திருக்கும். இதன் காரணமாக, இந்தப் பிரதேசத்தைச் சேர்ந்த மக்கள், நீரைத்தேடி அலைய வேண்டிய அவசியமிருக்காது. கிராமத்தின் பாடசாலையும் நீர் மற்றும் தூய்மையாக்கல் வசதிகளைப் பெற்றுக்கொள்ளும். கைகளை கழுவிக்கொள்ளக்கூடிய பகுதியும் அமைந்துள்ளன.
Ford மோட்டர் கம்பனியின் ஆசிய பசுபிக் வளர்ந்து வரும் சந்தைகளுக்கான முகாமைத்துவ பணிப்பாளர் டேவிட் வெஸ்டர்மன் கருத்துத் தெரிவிக்கையில், “வேர்ல்ட் விஷன் லங்காவினால் முன்னெடுக்கப்படும் இந்த செயற்றிட்டம் என்பது, Ford காப்பு மற்றும் சூழல் மானியங்கள் என்பதை பிரதிபலிக்கும் வகையில் அமைந்துள்ளது. உள்ளூர் சமூகங்கள் மத்தியில் தூய்மையான நீரை பெற்றுக் கொள்வதுக்கான வாய்ப்பை வழங்கும் வகையில் அமைந்துள்ளது“ என்றார்.
சமூகத்தைச் சேர்ந்தவர்களுடனான ஆலோசனைகளின் அடிப்படையில், இந்த செயற்திட்டம் பூர்த்தி செய்யப்படும் என்பதுடன், அதன் உரிமையாண்மை என்பது, சமூக அடிப்படையிலான நிறுவனங்களுக்கு மாற்றப்படும். அதன் மூலம், இத்திட்டத்தின் நீண்ட கால நிலைபேறாண்மை உறுதி செய்யப்படும்.
Future ஒடோமொபைல்ஸ் பிரைவட் லிமிட்டெட் பிரதம நிறைவேற்று அதிகாரி சமத் தென்னகோன் கருத்துத் தெரிவிக்கையில், “Ford என்பது சமூகத்துக்கு நேர்த்தியான பங்களிப்பை வழங்குவது தொடர்பில் ஈடுபாட்டைக் கொண்டுள்ளது.
Future ஒடோமொபைல்ஸ் என்பது இலங்கையில் இந்த ஈடுபாட்டை வெளிக்கொண்டு வர முடிந்ததையிட்டு மிகவும் பெருமையடைகிறது. இந்தச் செயற்றிட்டம் நீண்ட தூரம் பயணிக்கும் என நான் கருதுகிறேன். வாகரை பிரதேசத்தைச் சேர்ந்த மக்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்தும் எனவும் எதிர்பார்க்கிறோம்” என்றார்.
வேர்ல்ட் விஷன் லங்கா லிமிட்டெடின் இடைக்கால தேசிய பணிப்பாளர் ஜொனதன் ஜோன்சன் கருத்துத் தெரிவிக்கையில், “Ford இடமிருந்து இந்த நிதி உதவியை பெற்றுக் கொண்டுள்ளதையிட்டு வேர்ள்ட் விஷன் திருப்தியடைகிறது. இது கட்டுமுறிவுகுளம் பகுதியைச் சேர்ந்த மக்களுக்கு நிவாரணமளிப்பதாக அமையும். வேர்ல்ட் விஷன் லங்கா என்பது தொடர்ச்சியாக நாடு முழுவதையும் சேர்ந்த இலகுவில் பாதிப்புறக்கூடிய சமூகங்களில் பணியாற்றி வருகிறது. குழசன போன்ற நிறுவனங்கள் இதில் முக்கிய பங்களிப்பை வழங்கி வருகின்றன. அசல் மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதில் நாம் நம்பிக்கை கொண்டுள்ளோம்’ என்றார்.
இலங்கையில் காப்பு மற்றும் சூழல் மானிய நிகழ்ச்சி என்பதற்கமைய, “Ford இனால் பல்வேறு செயற்பாடுகளுக்கு உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. அண்மையில், ஜப்பான் அவசர அரச சார்பற்ற நிறுவனத்தினால் முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களைச் சேர்ந்த சமூகங்களின் தரத்தை மேம்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றது.
2014 இல், “Ford இனால் Field Ornithology Group of Sri Lanka (FOGSL) க்கு 20,000 அமெரிக்க டொலர்கள் வழங்கியிருந்தது. 2013 இல், நிறுவனத்தினால் The Tree Society of Sri Lanka மற்றும் Wanasarana Thurulatha Swechcha Society ஆகிய இரு நிறுவனங்களுக்கு மொத்தமாக 15000 அமெரிக்க டொலர்கள் வழங்கப்பட்டிருந்தது. 2012 இல்,”Fire Prevention in Knuckles Forest Reserve” ‘ செயற்றிட்டம் இந்தத் திட்டத்தின் அங்குரார்ப்பண திட்டமாக தெரிவு செய்யப்பட்டிருந்தது.
2 hours ago
4 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
4 hours ago
5 hours ago