2025 செப்டெம்பர் 19, வெள்ளிக்கிழமை

வெலிமடையில் இலங்கை வங்கியின் பண வைப்பு இயந்திரம்

Gavitha   / 2016 ஏப்ரல் 07 , மு.ப. 04:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை வங்கியின்ஊவா மாகாணத்தின் 50ஆவது பண வைப்பு இயந்திரம்,  வெலிமடையில் நிறுவப்பட்டுள்ளது.

நாட்டிலுள்ள எந்தப்பகுதியிலும்  இலங்கை வங்கியின் கார்டை வைத்திருப்போருக்கு இலகுவான முறையில் கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்வதற்கு வசதிகளை மேம்படுத்தும் CDM வலையமைப்பின் பிரகாரம், இந்தப் புதிய சேவை வெலிமடையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் நாட்டில் காணப்படும் இலங்கை வங்கியின் பண வைப்பு இயந்திரங்களின் மொத்த எண்ணிக்கை 607 ஆக உயர்ந்துள்ளது.

நேரடியாக பண வைப்பு, பண மாற்றம், கடன் அட்டை கட்டணம் செலுத்தல் போன்ற வசதிகளை இந்த இயந்திரத்தினூடாக மேற்கொள்ள முடியும். அத்துடன் சாதாரண ATM இயந்திரத்தில் மேற்கொள்ளக்கூடிய பண மீளப்பெறல் சேவைகளையும் பெற்றுக் கொள்ளலாம் என வங்கி அறிவித்துள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X