2025 ஜூலை 25, வெள்ளிக்கிழமை

வருடத்தின் சிறந்த வாடிக்கையாளர் சேவைக்கான விருது

Editorial   / 2017 ஒக்டோபர் 06 , மு.ப. 01:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

DHL Expressஇன் இலங்கைக் கிளை, இந்த வருடத்துக்கான சிறந்த வாடிக்கையாளர் சேவை வழங்கும் நிலையத்துக்கான தங்க விருதை தம்வசம் கொண்டதென, 14ஆவது சர்வதேச வணிக விருதுகளில்,  Stevie® விருதுகள் அறிவித்தது. 

இலங்கையில் போக்குவரத்து பிரிவின் கீழ், அதிசிறந்த வாடிக்கையாளர் சேவை வழங்குநர் விருதானது, வாடிக்கையாளர்களின் நிலை, தன்மை, கற்றல், அபிவிருத்தி, வாடிக்கையாளர் குரல் முகாமைத்துவம், வருவாய் அமைப்பு செயற்றிட்டங்கள், ஊழியர் ஒன்றிணைப்பு நிகழ்ச்சிகள், சன்மானங்கள்  மற்றும் அடையாளப்படுத்தல்கள் என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு கணிக்கப்படுகிறது. 

“3,900 போட்டியாளர்களுக்கு இடையில், Stevie® தங்க விருதை, நாம் மிருந்த மரியாதையுடனும், பெருமையுடனும் பெற்றுக் கொள்கிறோம். தொடர்ந்தும் அதிசிறந்த வாடிக்கையாளர் சேவை வழங்கலை நோக்கமாக கொண்டு செயற்படுதலே எமது வெற்றிக்கான அடித்தளமாக அமைந்துள்ளது” என, இலங்கை DHL Expressஇன் இலங்கைக்கான தலைமை நிறைவேற்று அதிகாரி திமித்ரி பெரேரா தெரிவித்தார்.  

2016 ஆம் ஆண்டுக்கான Stevie® விருதுகளில், இலங்கை DHL Express ஆனது, அந்த ஆண்டுக்கான வாடிக்கையாளர் சேவை பிரிவுக்கான வெள்ளி விருதையும், சிறந்த வாடிக்கையாளர் சேவைப் பிரிவுக்கான வெண்கல விருதையும் பெற்றுக்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.  

இலங்கை DHL Express இன் வாடிக்கையாளர் சேவைகள் பிரிவின் தலைமை அதிகாரி விக்கி மெரியன் தமது உரையின் போது, “இலங்கை DHL Expressஆனது,  கடந்த 30 வருடங்களாக இணையற்ற தளவாடங்கள் சேவையை நம் நாட்டுக்கு வழங்கி வருகிறது. கடின உழைப்பு, அர்ப்பணிப்புடன் கூடிய தனித்தன்மைமிக்க வலுவான செயற்றிறனுக்கு கிடைத்த சன்மானமே, இந்த விருதுகளாகும். 2017ஆம் ஆண்டுக்கான வாடிக்கையாளர் சேவை பிரிவுக்கான தங்க விருதை பெற்றுக் கொண்ட இன்ப அதிர்ச்சியில், நாம் திளைத்துக் கொண்டிருக்கின்றோம்” என அவர் மேலும் தெரிவித்தார். 

சர்வதேச DHL Expressஆனது,  2017ஆம் ஆண்டின் சர்வதேச வர்த்தக விருதுகளின் தரப்படுத்தலில், முதல் பத்துக்குள் தெரிவானதோடு, சிறந்த வாடிக்கையாளர் சேவை வழங்குநர் விருதுக்கு, சர்வதேச ரீதியில் வாடிக்கையாளர் திருப்தி,  முன்னுரிமைச் சேவை வழங்கலை இடைவிடா நோக்கமாக கொண்ட, 15க்கும் மேற்பட்ட DHL நிறுவனங்கள்
தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தன.    

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .