2025 மே 12, திங்கட்கிழமை

வற் வரியை உடன் அதிகரிக்கவும்

S.Sekar   / 2022 மார்ச் 14 , மு.ப. 08:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

அடுத்தவாரம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளினால் அரசாங்கத்துக்கு முன்வைக்கப்படவுள்ள முதலாவது நிபந்தனையில் சகல பொருட்கள் மற்றும் சேவைகள் மீதான பெறுமதி சேர்க்கப்பட்ட வரியை (வற்) 15 சதவீதமாக உயர்த்துமாறு கோருவது அடங்கியுள்ளதாக அறிய முடிகின்றது.

இந்த விஜயத்தின் போது நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச மற்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் அரசாங்கத்தின் சிரேஷ்ட அதிகாரிகளுடனும் சந்திப்புகளை மேற்கொள்ளும்.

தற்போது இந்தப் பெறுமதி 8 சதவீதமாக காணப்படுவதுடன், 2019 நவம்பர் மாதம் 30ஆம் திகதி வரை இந்தப் பெறுமதி 15 சதவீதமாக காணப்பட்டது. சுற்றுலாத் துறையின் சகலவிதமான சேவைகளும் வற் வரிகளிலிருந்து விலக்கழிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X