2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

வலுத் தேவையை நிவர்த்தி செய்யும் வாய்ப்புகள் பற்றிய கலந்துரையாடல்

S.Sekar   / 2022 ஏப்ரல் 10 , மு.ப. 04:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் அதிகரித்துச் செல்லும் வலுத் தேவையை நிவர்த்தி செய்வதற்கு புதுப்பிக்கத்த வலுப் பிறப்பாக்கல் மற்றும் விநியோகம் என்பவற்றை மேம்படுத்தக்கூடிய வழிமுறைகளைப் பற்றி கலந்தாலோசிப்பதற்கான கருத்தரங்கு ஒன்றை கொழும்பிலுள்ள நோர்வே தூதரகம், Western Norway University of Applied Sciences (HVL)மற்றும் யாழ்ப்பாண பல்கலைக்கழகம் ஆகியவற்றுடன் இணைந்து ஏற்பாடு செய்திருந்தது. “தூய மற்றும் நிலைபேறான வலு யுகத்தை நோக்கி: இலங்கையில் நிலவும் வலுத் தேவைகளை நிவர்த்தி செய்வதற்கான வாய்ப்புகள்” (“Towards a clean and sustainable energy era: Opportunities to meet the energy demand in Sri Lanka”) எனும் தலைப்பில் கோல் ஃபேஸ் ஹோட்டலில் இந்தக் கருத்தரங்கு இன்று இடம்பெற்றது. இதில் தனியார் துறை, கல்விமான்கள், நன்கொடை வழங்கும் சமூகம் மற்றும் சம்பந்தப்பட்ட முகவர் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் நோர்வே தூதுவர் டீரன யுரன்லி எஸ்கடேல் (Trine Jøranli Eskedal) கருத்துத் தெரிவிக்கையில், 2050 ஆம் ஆண்டளவில் புதுப்பிக்கத்தக்க மின்வலு பிறப்பாக்கல் இலக்குகளை எய்துவது தொடர்பில் இலங்கை உடன்பட்டுள்ளது. இந்த இலக்கை நோக்கி நாடு முன்னேறும் நிலையில், பொருத்தமான கொள்கைச் சூழல், புத்தாக்கமான நிதிக் கட்டமைப்புகளை கட்டியெழுப்புதல் மற்றும் துறையினுள் அதிக முதலீடுகளை கவர்வதற்கு குறிப்பாக தனியார் துறையிலிருந்து புதிய செயன்முறைகளை ஏற்பாடு செய்தல் போன்றவற்றை ஏற்படுத்துவது முக்கியமானதாகும். ஆய்வுகள் முன்னெடுப்பதற்கான வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதுடன் புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் முக்கியமாக சகல பங்காளர்களுடனும் கலந்தாலோசனைகள் மற்றும் கைகோர்ப்புகள் ஆகியவற்றை மேற்கொள்ள வேண்டும். நோர்வே அதிகளவு புதுப்பிக்கத்தக்க வலுவை பயன்படுத்தும் நாடாக அமைந்திருப்பதுடன், இலங்கைக்கு அதன் புதுப்பிக்கத்தக்க வலு இலக்குகளை எய்துவதற்கு ஆதரவளிப்பதற்கு தன்னை அர்ப்பணிப்பத்துள்ளது.” எனக் குறிப்பிட்டார்.

இலங்கையினால் தூய வலுவுக்கு மாற்றமடைவது மற்றும் எவ்வாறு நோர்வே நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களால் பங்களிப்பு வழங்க முடியும் என்பது பற்றி HVL இன் பேராசிரியர் தயாளன் வேலாயுதப்பிள்ளை குறிப்பிடுகையில், நோர்வேயைச் சேர்ந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் தனியார் துறை நிறுவனங்கள் ஆகியன இலங்கையின் அமைப்புகளுடன் இணைந்து இலங்கையில் நிலவும் வலுத் தேவையை நிவர்த்தி செய்யக்கூடியதாக இருக்கும். கிளிநொச்சியில் அமைந்துள்ள நோர்வே நிதி உதவியில் இயங்கும் மிதக்கும் சூரியப் படல் தொகுதி அதற்கு உதாரணமாகும் என்றார்.

நிலைபேறாண்மை மற்றும் தூய வலு தொடர்பான நிபுணரான கலாநிதி. விதுர ரலபனாவ கருத்துத் தெரிவிக்கையில், “இயற்கைக் கட்டமைப்புகளில் காலநிலை என்பது பாரிய அனர்த்தத்தை ஏற்படுத்தும் நிலையில், துரித கதியில் காபனகற்றல் என்பது எமது வாழ்நாளில் மாபெரும் சவாலாக அமைந்துள்ளது. எதிர்காலத்துக்காக எமது வலுக் கட்டமைப்புகளை மீளத்துக் கொள்வதற்கான வாய்ப்பையும் இது வழங்கும். பெருமளவு புதுப்பிக்கத்தக்க வலு மூலங்களுடன், இலங்கையினால் இந்த நடவடிக்கைகளில் முன்னிலையில் திகழக்கூடியதாக இருக்கும்.” என்றார்.

Current Solar AS இன் பிரதம நிறைவேற்று அதிகாரி இங்கே விகேஸ்தால் (Inge Vikesdal) இலங்கையில் சூரிய சக்தியை பயன்படுத்துவதற்கு காணப்படும் பெருமளவு வாய்ப்புகள் பற்றிக் குறிப்பிட்டிருந்தார்.  Greenstat AS இன் ஸ்ட்ருலே பெடெர்சன் (Sturle Pedersen) குறிப்பிடுகையில், இலங்கையில் hydrogen தீர்வுகளை நிறுவுவதற்கு காணப்படும் வாய்ப்புகள் பற்றிக் குறிப்பிட்டிருந்தார். இலங்கையில் green hydrogen பிறப்பிப்பதற்கான மாதிரித் திட்டத்தை முன்னெடுப்பதற்காக, 2022 மார்ச் மாதம் இலங்கை பெற்றோலிய அபிவிருத்தி அதிகாரசபையுடன் Greenstat உடன்படிக்கையொன்றில் கைச்சாத்திட்டிருந்தது.

இந்த கருத்தரங்கில் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் அருளம்பலம் அற்புதராஜா, இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் தமித குமாரசிங்க, இலங்கை நிலைபேறான வலு அதிகாரசபையின் தவிசாளர் ரஞ்சித் சேபால மற்றும் லங்கா மின்சார கம்பனியின் பொது முகாமையாளர் கலாநிதி. நரேந்திர டி சில்வா (LECO) ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X