Lenin Raj / 2026 மார்ச் 17 , பி.ப. 12:11 - 0 - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் காப்புறுதித் துறையில் முன்னணியில் திகழும் ஜனசக்தி குழுமத்தின் (JXG) முதன்மை வர்த்தக நாமமான ஜனசக்தி லைஃப், 2025ஆம் ஆண்டுக்கான தனது நிதிப் பெறுபேறுகளை வெளியிட்டுள்ளது.
இதன்படி, நிறுவனம் ரூ. 3.42 பில்லியன் நிகர இலாபத்தைப் பதிவு செய்து வலுவான வளர்ச்சிப் பாதையில் பயணிப்பதை உறுதிப்படுத்தியுள்ளது.
கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் புதிய வணிகங்கள் 67% என்ற பாரிய வளர்ச்சியை எட்டியுள்ளன. மொத்த எழுதப்பட்ட பிரீமியங்கள் (GWP) 31% வளர்ச்சியடைந்து ரூ. 8.65 பில்லியனாகப் பதிவாகியுள்ளது.
வரிக்கு முன்னரான இலாபமாக ரூ. 3.95 பில்லியனும், வரிக்கு பின்னரான நிகர இலாபமாக 3.42 பில்லியன் ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
நிறுவனத்தின் மொத்த சொத்துக்கள் 6% ஆல் அதிகரித்து 40.3 பில்லியன் ரூபாவாக உயர்ந்துள்ளது.
2025ஆம் ஆண்டில் மாத்திரம் உரிமைகோரல்கள் மற்றும் நன்மைகளுக்காக 3.6 பில்லியன் ரூபாவினை இந்த நிறுவனம் வழங்கியுள்ளது. இது காப்புறுதிதாரர்களின் தேவைகளை நிறைவேற்றுவதில் ஜனசக்தி லைஃப் கொண்டுள்ள உறுதிப்பாட்டைச் சுட்டிக்காட்டுகிறது.
இது குறித்து கருத்துத் தெரிவித்த ஜனசக்தி இன்சூரன்ஸ் பிஎல்சியின் தலைவர் அன்னிகா சேனாநாயக்க, "எமது மூலோபாய நிலைப்படுத்தல் மற்றும் நெறிமுறையான நிதி முகாமைத்துவமே இந்த வெற்றிக்குக் காரணம். நீண்டகால மதிப்பை உருவாக்குவதில் நாம் உறுதியாக செயற்படுகின்றோம் என்றார்.
திறமையான செயல்பாடுகள் குறித்துப் பேசிய பணிப்பாளர் மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரி ரவி லியனகே, "டிஜிட்டல்மயமாக்கல், சேவைப் புத்தாக்கம் மற்றும் வாடிக்கையாளர் சேவைத் தொகுப்பு முகாமைத்துவம் ஆகியவற்றில் நாம் காட்டிய கவனமே 67% புதிய வணிக வளர்ச்சிக்குக் காரணமாக அமைந்தது," எனக் குறிப்பிட்டார்.
30 ஆண்டுகால அனுபவத்தைக் கொண்ட ஜனசக்தி லைஃப், தற்போது நாடு முழுவதும் 76 கிளைகளுடன் தனது சேவையை விஸ்தரித்துள்ளதுடன், எதிர்வரும் காலங்களில் சந்தைப் பரப்பை மேலும் விரிவுபடுத்தத் திட்டமிட்டுள்ளது.
2 hours ago
2 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago
3 hours ago