Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2020 மார்ச் 11 , பி.ப. 01:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
கனடாவில் உற்பத்தி செய்யப்படும் ECO2 ஃபுமி சிலின்டரில் அடைக்கப்பட்ட பொஸ்பைன் ஃபுமிகன்ட்ஐ சந்தைப்படுத்துவதற்கான முழுமையான ஒழுங்குமுதல் ஒப்புதலை, தேசிய தாவர கட்டுப்பாட்டு சேவைகள் திணைக்களம் மற்றும் பூச்சிகொல்லிகள் பதிவாளர் திணைக்களம் ஆகிய நிறுவனங்களிடம் இருந்து, சுரேன் குக்கி ஏஜென்ஸீஸ் (பிரைவட்) லிமிட்டெட் பெற்றுக்கொண்டுள்ளது.
இந்தப் பொஸ்பைன் ஃபுமிகன்ட், விவயாய உற்பத்திப் பொருள்கள் பழுதடையாமல் பாதுகாப்பதற்குப் பயன்படுத்தப்படும் சர்வதேச ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட இரசாயனப் பதார்த்தம் ஆகும்.
பதனிடப்படாத பச்சையான விவசாய உற்பத்திப் பொருள்கள், கால்நடைத் தீவனங்கள், தீவனங்களுக்கான மூலப்பொருள்கள், பழவகைகள், மரக்கறிகள், மூலிகைத் தேயிலையுடன் கூடிய உணவுவகைகள், உணவுடன் தொடர்புபட்ட ஏனைய மூலப்பொருள்கள் ஆகியவற்றைப் பாதுகாப்பதற்குப் இது பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது.
மேலும், ECO2 ஃபுமிகன்ட் சுற்றாடலுக்குத் தீங்கற்றதும் எரிபற்றுநிலை அற்றதுமாகும். மேலும் இதை வண்டுகள், பூச்சிகளைக் கட்டுப்படுத்துவதற்கு இலகுவாகப் பிரயோகிக்கக் கூடியதாக உள்ளதுடன், விவசாய உற்பத்திப் பொருள்களை அறுவடைக்குப் பின்னர், பாதுகாப்பாகக் களஞ்சியப்படுத்தி வைப்பதற்கும் உகந்ததாக அமைகின்றது. தானியங்கள், புதிய மற்றும் உலர்த்திய பழங்கள், விதைகள், புகையிலை, தேயிலை போன்றவற்றையும் சிறப்பாகப் பாதுகாத்துக் கொள்ளமுடிகின்றது.
பொஸ்பைன் மற்றும் பொஸ்பைன் தொடர்பான பல்வேறு வகைப்பட்ட இரசாயனப் பொருள்களை, சிறப்புச் சந்தைப் பிரிவுகள் ஊடாக விநியோகம் செய்யும் உலகின் முன்னணி நிறுவனமாகத் திகழ்வது ஷீடெக்-ஸோல்வே நிறுவனமாகும். ஷீடெக் இன்டஸ்டீஸ் சர்வதேச நிறுவனம், இரசாயனம் மற்றும் இரசாயனத் தொழில்நுட்பங்களைக் கையாளும் சிறப்புத் தேர்ச்சிபெற்ற நிறுவனமாகத் திகழ்வதுடன் வருடத்துக்கு இரண்டு பில்லியன் அமெரிக்க டொலர் விற்பனையையும் கொண்டதாகத் திகழ்கின்றது.
ஷீடெக் நிறுவனம், கடந்து பத்து வருடங்களுக்கும் மேலாக, சிலின்டரில் அடைக்கப்பட்ட பொஸ்பைன் மற்றும் கார்பன் டீஒக்சைட் ஃபுமிகன்ட் போன்றவற்றை அவுஸ்திரேலிய சந்தைகளுக்கு விநியோகித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும். அத்துடன், ஜேர்மனி, துருக்கி, சீனா, சைபிரஸ், இந்தோனேசியா, தாய்லாந்து ஆகிய நாடுகளிலும் தனது முன்னணிச் சந்தை வாய்ப்புகளைத் தக்கவைத்துள்ளது. தற்போது, இலங்கையும் இப்பட்டியலில் இடம்பிடித்துள்ளது.
சுரேன் குக்கி ஏஜென்ஸீஸ் மற்றும் ஷீடெக்-ஸோல்வே இன்டஸ்டீஸ் கூட்டாக, இத்தகைய முதற்றரமான உற்பத்தியை இலங்கையில் அறிமுகப்படுத்தி உள்ளன. இதனுடைய முதற்படியாக, ECO2 ஃபுமி பாவனையாளர்களுக்கு, இதைப் பயன்படுத்துவது குறித்த செய்கைவழி விளக்கப் பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன. இந்த ஒருநாள் இலவச பயிற்சிகள், வழக்கமான ஃபுமிகன்ட் பயன்படுத்துவதற்கும் ECO2 ஃபுமிகன்ட் பயன்படுத்துவதற்கும் உள்ள வேறுபாட்டை விளங்கிக் கொள்வதற்கு வாய்ப்பாக அமையும்.
சுரேன் குக்கி ஏஜென்ஸீஸ் நிறுவனத்தின் இயக்குநர் ராஜித குக்கி, அறிமுக நிகழ்வில் கருத்துத் தெரிவிக்கையில், ஷீடெக்-ஸோல்வே இன்டஸ்டீஸ் நிறுவனத்தின் உயர்தரமான உற்பத்திகளை, அவர்களின் தொழில்நுட்ப பக்கபலத்துடன் வழங்குவது, பயனாளர்களுக்குப் பலாபலன்களுடன் கூடிய நம்பிக்கையைத் தருகின்றது. அத்துடன், பூச்சி கொல்லிகள் முகாமைத்துவத் துறையில் மிகப்பிந்திய கண்டுபிடிப்பு மற்றும் தொழில்நுட்பத்துடன் கூடியவற்றை உடனடியாக அறிமுகம் செய்யும் பண்பாடு தொடரும் என்றும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
6 hours ago