2025 செப்டெம்பர் 11, வியாழக்கிழமை

ஸ்ரீ லங்கா @ 100 புதிய விண்ணப்பச் சுற்று ஆரம்பிப்பு

S.Sekar   / 2021 டிசெம்பர் 10 , மு.ப. 07:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்கா முகவர் அமைப்பினால் (USAID) ஆதரவளிக்கப்படும் தனியார் துறை தலைமையிலான வணிக மேம்பாட்டு தளமாகிய ஸ்ரீ லங்கா@100 ஆனது, வருமான வளர்ச்சியைத் துரிதப்படுத்துவதற்கும், உள்ளக செயற்பாடுகளை மேம்படுத்துவதற்கும், புதிய சந்தைகளை அணுகுவதற்கும் வணிக ஆலோசனைச் சேவைகளை எதிர்பார்க்கும்  நடுத்தர சந்தை நிறுவனங்களுக்கான  தனது மூன்றாவது சுற்று விண்ணப்பங்களை அறிவித்தது.

50 மில்லியன் ரூபாய் மற்றும் அதற்கு மேற்பட்ட வருடாந்த வருமானத்துடன் இலங்கையில் ஒரு கம்பனிகளாகப் பதிவுசெய்யப்பட்டுள்ள அனைத்து நடுத்தர - சந்தை நிறுவனங்களும் தெரிவுக்கு தகுதியுடையவையாகும். பட்டியலிடப்பட்ட விண்ணப்பதாரர்களின் விண்ணப்ப மதிப்பாய்வுகள், நேர்காணல்கள் மற்றும் வலியுறுத்தல் சந்திப்புகள் உள்ளிட்ட  தெரிவுச் செயல்முறை 2022 பெப்ரவரி மாதம் நடைபெறுமென எதிர்பார்க்கப்படுவதுடன், 2022 மார்ச்  மாதம்  தேர்ந்தெடுக்கப்பட்ட நிறுவனங்களுடன் இறுதி இணைந்து பணியாற்றுதலுடன் நிறைவடையும். விண்ணப்பிப்பதற்கு 2021 நவம்பர் 15 ஆம் திகதி முதல் 2022 சனவரி 15 ஆம் திகதி வரை srilanka100.lk இனை அணுகவும்.

 

ஸ்ரீ லங்கா@100 இன் இணை நிறுவுனர் மற்றும் ஸ்டெக்ஸ் முகாமைத்துவப் பணிப்பாளருமான, கலாநிதி குமுது குணசேகர, சமீபத்திய இணைந்து பணியாற்றல் சுழற்சியைப் பற்றி பேசுகையில், நாட்டின் பொருளாதாரப் பயணத்தில் இது ஒரு முக்கியமான நேரத்தில் வருகிறது என்று குறிப்பிட்டார். “இலங்கையின் பொருளாதாரம் மற்றும் வணிகங்கள், முன்னைய பல சவால்களில் இருந்து மீண்டதைப் போலவே, மிக மோசமான தொற்றுநோயிலிருந்து போற்றத்தக்க மீளெழுச்சியை வெளிப்படுத்தியுள்ளன. வரவிருக்கும் மாதங்கள் மீட்சிக்கு மட்டுமல்ல, வளர்ச்சியைத் தூண்டுவதற்கு தைரியமான நடவடிக்கைகளை எடுப்பதற்கான நேரமாக இருக்கும். இதனால்தான் ஸ்ரீ லங்கா @100 தற்போதைய சவால்களை எதிர்கொள்ளவும், வளர்ச்சி உத்திகளை நடைமுறைப்படுத்தவும் நடுத்தர - சந்தை நிறுவனங்களுக்கு உதவுவதில் கவனம் செலுத்துகிறது. நாங்கள் தொழில்துறை முற்போக்குவாதிகளாகவிருப்பதுடன் இன்றுவரை நாங்கள் 13 நிறுவனங்களை இணைத்துள்ளோம். எங்கள் ஆய்வில், எங்கள் தளத்தில் சேர விண்ணப்பிக்கும் நிறுவனங்களின் சிரேஷ்ட தலைமைத்துவத்தின் இலட்சியம் மற்றும் அளக்கக்கூடிய சாத்தியக்கூறுகளை நாங்கள் முக்கியமாக மதிப்பீடு செய்கிறோம்” என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

"குறிப்பாக கொவிட்-19 கட்டுப்பாடுகளுடன், தளர்ந்து போன பொருளாதார வளர்ச்சியும் மீண்டும் ஆரம்பிப்பது  உலகளவில் வணிகங்களுக்கு ஒரு அடிப்படை சவாலாக உள்ளது" என்று USAID மிஷன் பணிப்பாளராகிய ரீட் ஏஷ்லிமன் கூறினார். " ஸ்ரீலங்கா@100 போன்ற முன்னெடுப்புகள் மூலம், நடுத்தர சந்தை நிறுவனங்கள் வலுவாகவும் மீளெழுச்சியுடனும்  இருக்க USAID உதவுகிறது, எனவே அவர்கள் இலாபம் மற்றும் வேலைவாய்ப்பை அதிகரிப்பதற்குத் தற்போதைய சவால்களை திறம்பட வழிநடத்த முடியும்" என்றும் அவர் குறிப்பிட்டார்.

தொழில்நுட்பம் முதல் விவசாயம் வரையிலான துறைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் 13 உள்ளூர் நடுத்தர சந்தை நிறுவனங்கள் கடந்த வருடத்தில் ஸ்ரீலங்கா@100 இணைந்து பணியாற்றுவதற்கு உள்வாங்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு நிறுவனமும் கணக்கியல், நிதி, சந்தைப்படுத்தல், சட்டம், தொழில்நுட்பம் மற்றும் முகாமைத்துவம் உள்ளிட்ட துறைகளில் அதிக திறன் கொண்ட ஆலோசனை சேவைகளைப் பெறுகின்றன.

ஸ்ரீலங்கா @100 என்பது USAID இன் ஆதரவுடன் 2020 இல் ஆரம்பிக்கப்பட்ட  ஒரு தனியார் துறை தலைமையிலான வணிக மேம்பாட்டு தளமாகும். இலங்கை சுதந்திரமடைந்த 100 வருடங்களுக்குள் உயர் வருமானம் கொண்ட நாடாக மாறுவதற்கு உதவுவதற்காக, உள்நாட்டுச் செயற்பாடுகளை மேம்படுத்துவதற்கும், தயாரிப்பு இலாகாக்களை மேம்படுத்துவதற்கும், புதிய சந்தைகளை அணுகுவதற்கும் மற்றும் மூலதனத்தை ஈர்ப்பதற்கும் இந்த முன்னெடுப்பானது  உயர் சாத்தியமுள்ள நடுத்தர - சந்தை நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .