2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

ஸ்ரீ லங்கா டெலிகொமில் புதிய பிரதம நிறைவேற்று அதிகாரி

Editorial   / 2020 மே 12 , மு.ப. 11:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

மே மாதம் 1ஆம் திகதி முதல் அமலுக்கு வரும் வகையில் ஸ்ரீ லங்கா ரெலிகொம் பிஎல்சியின் பிரதம நிறைவேற்று அதிகாரியாக லலித் மொஹான் செனெவிரட்ன நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது ஸ்ரீ லங்கா ரெலிகொம் நிர்வாக சபையில் சுயாதீன நிறைவேற்று அதிகாரமற்ற பணிப்பாளராக செயலாற்றும் இவர், நிறைவேற்று அதிகாரமுடைய பணிப்பாளராக பணிநிலை உயர்த்தப்படுவார்.

பட்டய பொறியியலாளரும், ஐக்கிய இராஜ்ஜியத்தின் பொறியியல் நிறுவனத்தின் அங்கத்தவருமான செனெவிரட்ன, கூட்டாண்மைத் துறையில் 35 வருட கால அனுபவத்தைக் கொண்டுள்ளார்.

1982 ஆம் ஆண்டு தொலைத்தொடர்பாடல் துறையில் இவர் தமது தொழில் வாழ்க்கையை ஆரம்பித்திருந்தார். 1988 ஆம் ஆண்டில் தெற்காசியாவின் முதல் மொபைல் தொலைபேசி வலையமைப்பான செல்டெல் நிறுவனத்தின் பொறியியல் பிரிவின் தலைமை அதிகாரியாக இவர் நியமிக்கப்பட்டார்.

1990 ஆம் ஆண்டில், செனெவிரட்ன, மோட்டரோலா கோர்பரேஷனில் பணியை பொறுப்பேற்று சிங்கப்பூருக்கு விஜயம் செய்திருந்தார். இதன் போது, ஸ்ரீ லங்கா ரெலிகொம் மற்றும் மோட்டரோலா ஆகியவற்றுக்கிடையே உறவை ஏற்படுத்தி, அதனூடாக இலங்கையின் பின்தங்கிய பகுதிகளுக்கும் தொலைபேசி சேவைகளை பெற்றுக் கொடுப்பதில் முக்கிய பங்களிப்பை வழங்கியிருந்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X