2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

ஹுண்டாய் கிரான்ட் i10 அறிமுகம்

Gavitha   / 2016 ஒக்டோபர் 18 , மு.ப. 03:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

முற்றும் முழுதான புதிய கிரான்ட் i10 காரின் வருகையானது முன்னைய கார்களின் தேவையை நிரப்பக்கூடிய சாத்திய முள்ளதாக இருப்பதுடன் மிகவும் பிரபல்யமானது.  

கிரான்ட் i10 காரில் அனைத்து தேவைக்கான பாகங்களும் உள்ளன. அதன் விசாலமான உட்பகுதி மட்டுமல்ல இன்னும் பாரியளவில் அதன் ஒட்டு மொத்த குறுக்குப்பகுதியும் கம்பீராக உள்ளதுடன் நிலையான அம்சங்களாலும் நிரப்பப்பட்டு பொருத்தமான முழு அளவிலான காராக எமது சந்தையில் உள்ளது.  

முற்றிலும் புத்தம் புதிதான கிரான்ட் i10 காரானது இரண்டு தெரிவுகளுடன் இலங்கையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஒட்டோ பேசிக் மொடல் மற்றது ஒட்டோ ஃபுலி லோடட் மொடல். இப் பிரிவிலுள்ள ஏனைய போட்டியான கார்களுடன் ஒப்பிடுகையில் இது அதிக அம்சங்களைக் கொண்டுள்ளது. தன்னியக்க பரிவர்த்தனை, காரின் தன்னியக்க சகல கார் கண்ணாடிகள், பின்னாலுள்ளவற்றை துலக்கிக் காட்டும் கண்ணாடி, எயார் பெக், தொழிற்சாலையிலேயே பொருத்தப்பட்டுள்ள கலப்பு உலோக சக்கரம், உயரத்தை சரி செய்யக்கூடிய ஆசனங்கள், வாயு குளிரூட்டிகள், காற்றோட்டத்திற்கான இடைவெளி, உயர் தரத்திலான ஒலி பெருக்கி, கீலெஸ் என்ரி, பிற்புறமாக உள்ள கெமரா, சுழலக்கூடிய முற்பக்க ஒளி விளக்குகள் மற்றும் பனிமூட்டத்துக்கான ஒளி விளக்குகள், டெயில் விளக்குகள், பிற்புற வைப்பர்கள், உயரத்தை சரி செய்யக்கூடிய ஆசன பட்டிகள், சரி செய்யக்கூடிய ஹெட்ரெஸ்டுகள், சமநிலையிலான மடிக்கக்கூடிய

ஆசனங்கள் மற்றும் சரி செய்யக்கூடிய ஸ்டியரிங் ஆகியன உள்ளன.  
கிரான்ட் i10 காரானது 9 வர்ணங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அறிமுக விலையாக இலங்கை நாணயங்களில் ரூ. 2.9 மில்லியனிலிருந்து ரூ. 3.25 மில்லியன் வரை காணப்படுகிறது.    


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X