Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2016 ஜனவரி 19 , மு.ப. 07:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
லஃபார்ஜ்ஹொல்சிம் குழுமத்தின் அங்கத்துவ நிறுவனமான ஹொல்சிம் (லங்கா) லிமிட்டெட், பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்பம் தொடர்பில் தொடர்ச்சியான தனது பங்களிப்பை உறுதி செய்யும் வகையில், டீசல் அன்ட் மோட்டர் என்ஜினியரிங் பிஎல்சியிடமிருந்து (DIMO), மாபெரும் முதலீட்டில் இலங்கையில் விநியோகிக்கப்பட்டுள்ள மாபெரும் நிலச் சமன் இயந்திரம் (Dozer) ஒன்றை கொள்வனவு செய்துள்ளது. இந்த இயந்திரத்தின் பிரதான பயன்பாடு என்பது, சுண்ணாம்புக் கற்பாறைகளை கிளித்தல் மற்றும் செப்பனிடுவதாக அமைந்துள்ளது.
புதிய D375A-6R என்பது நாட்டில் காணப்படும் மிகப்பெரிய நிலச் சமன் இயந்திரங்களில் 03ஆம் தலைமுறையைச் சேர்ந்த ரகமாக அமைந்துள்ளது. இந்த இயந்திரத்தின் ஏக உரிமையை ஹொல்சிம் கொண்டுள்ளதுடன், பதினொரு வருட கால பராமரிப்பு ஒப்பந்தத்தை Komatsu D375A-5 உடன் கொண்டுள்ளது. DIMO இனால் ஹொல்சிமுக்கு வழங்கப்படும் இரண்டாவது நிலச் சமன் இயந்திரமாக அமைந்துள்ளது. இந்த கொள்கை அடிப்படையிலான செயற்பாடுகளுக்கமைய, இலங்கையில் முதல் தடவையாக ஹொல்சிம் புதிய மேம்படுத்தப்பட்ட Komatsu D375A-6R இயந்திரத்தைப் பத்து வருட கால (10) பராமரிப்பு உடன்படிக்கையை DIMO உடன் கொண்டுள்ளது. துறைகளில் காணப்படும் இரு மாபெரும் நிறுவனங்களின் உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
ஹொல்சிம் லங்காவின் பிரதம நிறைவேற்று அதிகாரி பிலிப்பே ரிச்சார்ட் கருத்து தெரிவிக்கையில், 'உட்கட்டமைப்புத் தேவைகள் அதிகரித்து வரும் நிலையில், சீமெந்துக்கான தேவை அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதுடன், இந்த நிலச் சமன் இயந்திரம் (Dozer) ஒன்றின் மூலமாக நிர்மாணத்துறையின் பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்பம் என்பன மாற்றியமைக்கப்படவுள்ளன.
புத்தாக்கம் என்பதில் ஹொல்சிம் எப்போதும் முன்னோடியாக திகழ்வதுடன், இந்த இயந்திரத்தின் ஏக உரிமையாளராகவும் செயற்பாட்டாளராகவும் திகழ்கிறது. இதன் மூலமாக உயர்ந்தளவு வினைத்திறன், உற்பத்தித்திறன் மற்றும் வலு ஆகியவற்றை புதிய உயர் நிலைகளுக்கு கொண்டு செல்லும் நடவடிக்கைகளை முன்னெடுக்கிறோம்' என்றார்.
D375A-6 என்பது வலு மற்றும் சமநிலை ஆகியவற்றை சிறந்தளவில் கொண்டுள்ளது. அகழ்தல் மற்றும் தள்ளும் செயற்பாடுகளுக்கு அவசியமான வலு அதிகளவில் காணப்படுகிறது. கீறும் செயற்பாடுகளின் போது, சாய்வான பகுதிளில் சிறந்த சமநிலையையும் கொண்டுள்ளது. lock-up torque converter மூலமாக D375A-6 நேரடியாக இயங்க உதவுவதுடன், வேகத்தையும் உற்பத்தியையும் அதிகரிக்க உதவியாக அமைந்துள்ளது. ROPS Canopy போன்ற மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு உள்ளம்சங்களைக் கொண்டுள்ளது. பாரிய பல்-திறன் கொண்ட LCD வர்ண திரை, சுய பிரச்சினைகளை இனங்காணும் வசதிகள், ரிவர்ஸ் கமெராக்கள், அகன்ற எரிபொருள் தாங்கி போன்றவற்றைக் கொண்டுள்ள இந்த இயந்திரம், இதற்கு முன்னைய D375A-5 இயந்திரத்தை விட 14 சதவீதம் திறன் வாய்ந்ததாக அமைந்துள்ளது. சராசரியாக இதன் வலு 85 (Hp) குதிரைவலுக்களாகும்.
DIMOச் சேர்ந்த நாம் மிகப்பெரிய மற்றும் சிறந்த இயந்திரத்தை விநியோகித்துள்ளமையையிட்டு பெருமையடைகிறோம். Komatsu என்பது அதன் நீடித்த மற்றும் தங்கியிருக்கக்கூடிய திறனுக்கு புகழ் பெற்றதாக விளங்குகிறது. Holcim உடன் இணைந்து செயலாற்றுவதையிட்டு நாம் மிகவும் மகிழ்ச்சியடைவதுடன், அவர்களின் செயற்பாடுகளுக்கு வலுச்சேர்ப்பதையிட்டும் மகிழ்ச்சியடைகிறோம். இந்த பங்காண்மை படிப்படியாக வலிமையடையும் என நான் எதிர்பார்க்கிறேன்' என DIMO பிஎல்சி தலைவரும் பணிப்பாளருமான ரஞ்சித் பண்டிதகே தெரிவித்தார்.
1 hours ago
1 hours ago
1 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
1 hours ago
4 hours ago