Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2017 ஏப்ரல் 24 , பி.ப. 07:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹமீடியா நிறுவனம் உலகத் தரம்வாய்ந்த லினன் (Linen) சாரம்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் பாரம்பரிய சாரம், வாழ்வில் புதியதொரு இடத்தைப் பிடிக்கவுள்ளது. “சௌகரியமான ஆடை” என பலராலும் கருதப்படும் சாரம் பற்றிய அடிப்படைத் தோற்றப்பாடானது இலங்கையின் முதன்மையான ஆடவர் நவநாகரிக வர்த்தகக் குறியீடாக திகழும் ஹமீடியாவின் ஆர்வத்தைத் தூண்டியுள்ளது. அந்த ஆர்வத் துண்டுதலின் காரணமாக ஒரு வருடம் முழுக்க பரீட்சார்த்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, இப்போது உயர் ரகமான நவநாகரிக சாரம்கள் உருவாகி சந்தைக்கு வந்திருக்கின்றது.
“kPbah (Pvt) Ltd. நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளருமான பௌசுல் ஹமீட் கூறுகையில், “இந்த சாரம்களில் ஒட்டுமொத்த துணியும் நெய்யப்பட்டுள்ளதால் இவை தனிச்சிறப்பு வாய்ந்த சாரம்களாக காணப்படுகின்றன. அதாவது, இதில் பொருத்துக்களோ மடிப்புக்களோ இல்லை என்பதே இதன் அர்த்தமாகும். ஆம்! ஆடைசார் அறிவுத்திறனைக் கொண்டுள்ள ஆடவர்களுக்காக புதியபோக்குகளை உருவாக்குவதற்கான ஹமீடியாவின் பேரார்வத்துக்கு அமைவாக தயாரிக்கப்பட்டுள்ள உலகின் முதலாவது சாரமாக இது திகழ்கின்றது. ஆண்களின் நவநாகரிக ஆடைகளை மேம்படுத்துவதிலும் அதேபோன்று எமது தனிச்சிறப்பு வாய்ந்த ஸ்டைல்களை உயர்த்துவதிலும் நாம் வேட்கையுடன் இருக்கின்றமையால், எமது சாறம்கள் எளிமைத்தன்மையையும் நேர்த்தியையும் ஒருங்கே கொண்டதாகக் காணப்படுகின்றன.
இலங்கையின் பாரம்பரிய கலாசாரத்தோடு ஒன்றித்துப்போன சாரம் ஆனது, உலகளாவிய போக்குகளை நாட்டின் பாரம்பரிய ஆடைகளுடன் கூட்டிணைப்பதால், இது ஒரு சிறந்த ஆடைத் தெரிவாகக் காணப்படுகின்றது. அத்தோடு, அதனை அணிபவர் எந்தவொரு நிகழ்விலும் சிறப்பாக மிளிர்வதற்கும் வசதியளித்து, வளர்ச்சியொன்றை அடைவதற்கு மிகப் பொருத்தமான ஒரு ஆடையாக திகழ்கின்றது. கடந்த சில வருடங்களில் சமூக வட்டங்களிடையே சாரம் உத்வேகத்தைப் பெற்றிருக்கின்றது. அந்த வகையில் இப் பண்டிகைக் காலத்தில் நவநாகரிகத்தில் அக்கறையுள்ள ஆடவர்களுக்கு இந்த பண்டிகைக் காலத்தில் மிகச் சிறந்த பாரம்பரிய ஆடவர் ஆடையை வழங்குவதற்கு நாம் விரும்புகின்றோம்” என்றார்.
2 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
9 hours ago