Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2017 ஒக்டோபர் 10 , மு.ப. 03:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
மோட்டார் வாகன மற்றும் மோட்டார் வாகன உதிரிப் பாகங்கள் ஏற்றுமதி பிரிவில் அதிக பெறுமதி சேர் ஏற்றுமதியாளராக இலங்கை ஹானஸ் கம்பனிக்கு சிறந்த ஏற்றுமதிக்கான ஜனாதிபதி விருது கிடைத்துள்ளது. இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபையால் ஏற்பாடு செய்யப்பட்ட “ஜனாதிபதி ஏற்றுமதி விருது 2016” விருது வழங்கும் விழாவில் வரையறுக்கப்பட்ட இலங்கை ஹானஸ் கம்பனி நிறுவனம் இந்த விருதை வென்றதோடு, ஜனாதிபதி ஏற்றுமதி விருது வழங்கும் விழா, கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் அண்மையில் நடைபெற்றது.
இலங்கை மண் உருவாக்கிய அதி சிறந்த தொழில் முயற்சியாளர்களில் ஒருவரான ரொஹான் பல்லேவத்தவின் எண்ணக்கருவொன்றுக்கமைய ஆரம்பிக்கப்பட்ட வரையறுக்கப்பட்ட இலங்கை ஹானஸ் கம்பனி தனியார் நிறுவனமானது, உலகின் முன்னணி மோட்டார் வாகன உற்பத்தியாளர்களான டொயோட்டா, வொல்வோ, ஹொண்டா, அஸ்ரன் மார்ட்டின், ஓப்பல், பீ.எம்.டபிள்யூ போன்ற நிறுவனங்கள் உற்பத்தி செய்யும் வாகனங்களுக்கு பொருத்தும், விபத்தின் தாக்கத்தை குறைப்பதற்கான கருவிக்கு (எயார் பேக்) தேவையான சென்சர்களை உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்து வருகிறது. பியகம முதலீட்டு வலயத்தில் 2003ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட வரையறுக்கப்பட்ட இலங்கை ஹானஸ் தனியார் நிறுவனத்தில் ஜப்பான் நாட்டைச் சேரந்த இத்தோ, முதன் முதலில் 8,000 இலட்சம் ரூபாய் தொகையை முதலீடு செய்திருந்தார். சாதாரண தரப் பரீட்சையை தொடர்ந்து கிடைத்த புலமைப்பரிசொன்றில் ஜப்பான் நாட்டுக்குச் செல்லும் வாய்ப்பைப் பெற்றமையே, ரொஹான் பல்லேவத்தவின் தொழில்முயற்சிக்கு திருப்புமுனையாக அமைந்தது எனலாம். தற்போதைய இத்தொழில் முயற்சி தொடர்பான எண்ணம் அக்காலப்பகுதியிலேயே அவருடைய உள்ளத்தில் தோன்றியுள்ளது.
ரொஹான் பல்லேவத்த நிறைவேற்றுத் தலைவராக உள்ள வரையறுக்கப்பட்ட இலங்கை ஹானஸ் தனியார் நிறுவனத்தில் இன்றளவில் 400 ஊழியர்கள் பணியாற்றுகின்றார்கள். 2016ஆம் ஆண்டில், இந்நிறுவனத்தின் வருமானம் 80 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும்.
4 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
7 hours ago