2025 ஜூலை 23, புதன்கிழமை

சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட 8 பேர் கைது

Super User   / 2014 பெப்ரவரி 02 , மு.ப. 08:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஆர்.ரஸ்மின்

முல்லைத்தீவு, முள்ளியவளை - பொன்னகர் பிரதேசத்தில்  ஆற்று மணல் அகழ்வில் ஈடுபட்ட எட்டு பேர் நேற்று (01)  கைது செய்யப்பட்டுள்ளதாக முள்ளியவளை பொலிஸார் தெரிவித்தனர்.

மண் அகழ்விற்கான அனுமதிப்பத்திரம் இல்லாமையினாலேயே இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

எனினும் இவர்கள் அனைவரும் பொலிஸ் பிணை நேற்று விடுதலை செய்யப்பட்டதுடன்  மணல் அகழ்விற்காக பயன்படுத்திய இரு உழவு இயந்திரங்கள் உள்ளிட்ட உபகரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, பிணையில் விடுதலை செய்யப்பட்ட எட்டு பேரும் நாளை (03) தினம் நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளதாக முள்ளியவளை பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .