2025 ஜூலை 17, வியாழக்கிழமை

சட்டவிரோத மதுபானங்களினால் ரூ. 16 இலட்சம் வருமானம்

Menaka Mookandi   / 2014 ஓகஸ்ட் 14 , மு.ப. 07:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் கடந்த 7 மாதங்களில் சட்டவிரோத மதுபான உற்பத்தி, விற்பனைகளில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக மதுவரித் திணைக்கள அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் 16 இலட்சத்து 87 ஆயிரம் ரூபா தண்டமாக அறவிடப்பட்டுள்ளதாக கிளிநொச்சி, முல்லைத்தீவு வட்டார மதுவரித் திணைக்களத்தினர் வியாழக்கிழமை (14) தெரிவித்தனர்.

கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் சட்டவிரோத மதுபான உற்பத்திகள், விற்பனைகள் அதிகரித்து காணப்படும் நிலையில், இதனை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் மதுவரித் திணைக்களத்தால் மேற்;கொள்ளப்பட்டு வருகின்றன.

கசிப்பு உற்பத்தி செய்தமை, கசிப்பை உடமையில் வைத்திருந்தமை, அனுமதிப்பத்திரமின்றி மதுபானம் வைத்திருந்தமை, அனுமதியின்றி கள் விற்பனை செய்தமை, மேலதிக கள் வைத்திருந்தமை உள்ளிட்ட குற்றங்களை இழைத்த 283 பேர் கடந்த ஏழு மாதங்களிலும் கைது செய்யப்பட்டனர்.

அவர்களுக்கு எதிராக அந்தந்த மாவட்டங்களிலுள்ள நீதிமன்றங்களில் வழக்குத் தாக்கல் செய்த வேளை, நீதிமன்றங்கள் 16 இலட்சத்து 87 ஆயிரம் ரூபா தொகையினை தண்டமாக விதித்துள்ளன.

அதிலும், கடந்த ஜுலை மாதம் மட்டும் 35 பேர் பிடிக்கப்பட்டு, அவர்களிற்கு 3 இலட்சத்து 57 ஆயிரத்து 500 ரூபா தண்டம் விதிக்கப்பட்டுள்ளதாக திணைக்களம் மேலும் தெரிவித்தது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X