2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

மன்னார் மாவட்ட செயலகத்துக்கு ரூ.223 மில்லியன் செலவில் புதிய கட்டிடம்

Menaka Mookandi   / 2014 ஒக்டோபர் 15 , மு.ப. 05:52 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.றொசேரியன் லெம்பேட்


மாவட்ட செயலகங்களை வலுப்படுத்தும் வேலைத்திட்டத்தின் கீழ் மன்னார் மாவட்டச் செயலகத்தின் புதிய  நான்கு மாடிக் கட்டிடத்துக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு, நேற்று (14) செவ்வாய்க்கிழமை மாலை மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் எம்.வை.எஸ்.தேசப்பிரிய தலைமையில் இடம்பெற்றது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் 223 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டின் கீழ் குறித்த கட்டிடம் நிர்மாணிக்கப்படவுள்ளது.

இந்நிகழ்வில், அரச நிர்வாக மற்றும் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் டி.எஸ்.செனவிரத்தின, கைத்தொழில் மற்றும் வணிகத்துறை அமைச்சர் றிஷாட் பதியுதீன், அரச நிர்வாக மற்றும் உள்நாட்டு அலுவல்கள் பிரதி அமைச்சர் விஜய தசநாயக்க, வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன், பிரதேச செயலாளர்கள், உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள் என பலரும் ஆகியோர் கலந்துகொண்டு அடிக்கல்லை நாட்டி வைத்தனர்.

இதனைத் தொடர்;ந்து இடம்பெற்ற நிகழ்வின்போது, 21 கிராம அலுவலர்களுக்கான நியமனக் கடிதங்கள் கையளிக்கப்பட்டது. அத்துடன், பிரதேச செயலகங்களுக்கான உபகரணங்கள், வரட்சி நிவாரண பணம் ஆகியவையும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .