2025 ஜூலை 17, வியாழக்கிழமை

மாந்தை கிழக்கில் 2,744 குடும்பங்கள் மீளக்குடியமர்வு

Menaka Mookandi   / 2014 ஜூலை 25 , மு.ப. 09:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

முல்லைத்தீவு மாவட்டம் மாந்தை கிழக்கு பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் 2 ஆயிரத்து 744 குடும்பங்களைச் சேர்ந்த 8 ஆயிரத்து 767 பேர் மீளக்குடியேறியுள்ளதாக மாந்தை கிழக்குப் பிரதேச செயலாளர் ரி.பிருந்தாகரன் வெள்ளிக்கிழமை (25) தெரிவித்தார்.

2009 டிசம்பர் மாதம் முதல் மாந்தை கிழக்குப் பிரதேச செயலாளர் பிரிவில் மீளக்குடியமர்த்த அனுமதிக்கப்பட்ட பின்னர் பிரதேச செயலர் பிரிவின் கீழுள்ள 15 கிராம அலுவலர்கள் பிரிவுகளிலுமே இவ்வாறு மக்கள் மீளக்குடியமர்த்தப்பட்டுள்ளனர்.

அந்தவகையில், வன்னிவிளாங்குளம் கிராம அலுவலர் பிரிவில் 131 குடும்பங்களும், அம்பாள்புரம் கிராம அலுவலர் பிரிவில் 237 குடும்பங்களும், கொல்லவிளாங்குளம் கிராம அலுவலர் பிரிவில் 184 குடும்பங்களும், ஒட்டறுத்த குளம் கிராம அலுவலர் பிரிவில் 181 குடும்பங்களும், சிவபுரம் கிராம அலுவலர் பிரிவில் 114 குடும்பங்களும், பாலிநகர் கிராம அலுவலர் பிரிவில் 451 குடும்பங்களும், கரும்புள்ளியான் கிராம அலுவலர் பிரிவில் 178 குடும்பங்களும், பூவரசங்குளம் கிராம அலுவலர் பிரிவில் 134 குடும்பங்களும், பாண்டியன்குளம் கிராம அலுவலர் பிரிவில் 322 குடும்பங்களும், செல்வபுரம் கிராம அலுவலர் பிரிவில் 242 குடும்;பங்களும், மூன்றுமுறிப்பு கிராம அலுவலர் பிரிவில் 173 குடும்பங்களும், நட்டாங்கண்டல் கிராம அலுவலர் பிரிவில் 161 குடும்பங்களும், விநாயகபுரம் கிராம அலுவலர் பிரிவில் 121 குடும்பங்களும், பொன்னகர் கிராம அலுவலர் பிரிவில் 59 குடும்பங்களும், சிறாட்டிகுளம் கிராம அலுவலர் பிரிவில் 56 குடும்பங்களும் என 2,744 குடும்பங்கள் மீளக்குடியமர்ந்துள்ளதாக செயலர் தெரிவித்தார்.

மீள்குடியமர்த்தப்பட்டவர்களுக்கான அடிப்படை வசதிகள் படிப்படியாக ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X