2025 ஜூலை 30, புதன்கிழமை

மின்னல் தாக்கத்தில் 3 மாடுகள் உயிரிழப்பு

Kanagaraj   / 2013 செப்டெம்பர் 02 , பி.ப. 04:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

முல்லைத்தீவு மாவட்டத்தில் வட்டவாகல் பகுதியில் மின்னல் தாக்கத்தில் 3 மாடுகள் உயிரிழந்துள்ளன. இந்த சம்பவம் இன்று திங்கட்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று மாலை வேளையில் பலத்த இடி மின்னலுடன் மழை பெய்ய ஆரம்பித்த பொழுதே இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.

வட்டவாகல் கிராமத்தைச் சேர்ந்த  எஸ். தங்கவேலாயுதம் என்பவரின் மாட்டுப்பட்டியில் கட்டப்பட்டிருந்த 2 மாடுகளும், அதே பகுதியில் எஸ். இராசலெட்சுமி என்பவரின் வீட்டில் கட்டப்பட்டிருந்த ஒரு பசுவுமே இவ்வாறு இறந்துள்ளன.

இதேவேளை வட்டவாகல் பகுதியில் மழையுடன் வீசிய பலத்த காற்றுக் காரணமாக வீதியிலும் வீடுகளிலும் நின்றிருந்த மரங்கள் சரிந்தும் முறிந்தும் வீழ்ந்துள்ளன.

முல்லைத்தீவு வட்டவாகல் சத்தகன்னி கோயிலுக்குப் அருகிலிருந்த பெரிய வேம்பு மரமும் முறிந்து விழுந்துள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .