2025 ஜூலை 17, வியாழக்கிழமை

கண்டாவளை பிரதேசத்திற்கு 61,500 லீற்றர் குடிநீர்

Menaka Mookandi   / 2014 ஜூலை 25 , மு.ப. 09:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவினால், கிளிநொச்சி மாவட்டத்தின் கண்டாவளைப் பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதிகளுக்கு நாளாந்தம் 61 ஆயிரத்து 500 லீற்றர் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருவதாக கிளிநொச்சி மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு வெள்ளிக்கிழமை (25) தெரிவித்தது.

கிளிநொச்சி மாவட்டத்தில் தற்போது நிலவும் வறட்சி காரணமாக குடிநீருக்குப் பெரும் தட்டுப்பாடு நிலவுகின்றது. இந்நிலையில், குடிநீர் தேவையான பகுதிகளுக்கு அனர்த்த முகாமைத்துவப் பிரிவினால் குடிநீர் விநியோகம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அந்தவகையில், கண்டாவளைப் பிரதேச செயலர் பிரிவின் கீழுள்ள தர்மபரம்; கிழக்கு, தர்மபுரம் மேற்கு, புன்னைநீராவி, புளியம்பொக்கணை, ஊரியான், கண்டாவளை, பிரமந்தனாறு, பெரியகுளம், கல்மடுநகர், பரந்தன் ஆகிய 10 கிராமஅலுவலர் பிரிவுகளுக்கும் 61 ஆயிரத்து 500 லீற்றர் குடிநீர் தினமும் விநியோகம் செய்யப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X