2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

மாந்தையில் 1,380 ஏக்கரில் உப-உணவுச் செய்கை

Menaka Mookandi   / 2014 பெப்ரவரி 12 , மு.ப. 07:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பிரதேசங்களில்  1,020 ஏக்கர் நிரப்பரப்பில் உழுந்தும் 360 ஏக்கர் நிரப்பிரப்பில் எள்ளும் பயிரிடப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட பாடவிதனா உத்தியோகஸ்தர் எஸ்.சிவகுமார் இன்று (12) தெரிவித்தார்.

மேற்படி பிரதேசங்களில் காலபோக நெற்செய்கையுடன், உழுந்து, நிலக்கடலை, எள்ளு உள்ளிட்ட உபஉணவுச் செய்கைகள் மேற்கொள்ளப்படுவது வழமை.

அந்த வகையில் இவ்வருடம் (2014) விவசாயிகளினால் 1,020 ஏக்கரில் உழுந்து செய்கை செய்யப்பட்ட அதேவேளை, உலக உணவு ஸ்தாபனத்தினால் 630 ஏக்கர் நிலத்தில் பயிரிடுவதற்கான எள்ளு விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ள நிலையில் அவற்றில் 360 ஏக்கர் நிலத்தில் எள்ளு இதுவரையிலும் பயிரிடப்பட்டுள்ளது.

மிகுதி பிரதேசங்களில் எள்ளினைப் பயிரிடும் நடவடிக்கையில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர் அவர் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .