2025 ஜூலை 17, வியாழக்கிழமை

முல்லை மாவட்ட குடிநீருக்கு 2 மில்லியன் நிதி

Menaka Mookandi   / 2014 ஜூலை 30 , பி.ப. 12:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

முல்லைத்தீவு மாவட்டத்தில் தற்போது நிலவும் குடிநீர்த் தட்டுப்பாட்டினை நீக்கும் பொருட்டு பொதுமக்களுக்கு குடிநீர் வழங்குவதற்காக அனர்த்த முகாமைத்துவ அமைச்சினால் 2 மில்லியன் ரூபா நிதி வழங்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர் நா.வேதநாயகம் புதன்கிழமை (30) தெரிவித்தார்.

மேற்படி நிதியினைக் கொண்டு குடிநீர் வழங்கும் நடவடிக்கைகள் கடந்த வாரம் முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இந்தக் குடிநீர் வழங்கல் நடவடிக்கையில் மாவட்டச் செயலகத்துடன் இணைந்து தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை, மற்றும் பிரதேச சபைகள் ஆகியன மேற்கொண்டு வருவதாக அவர் தெரிவித்தார்.

இந்த நடவடிக்கை, முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு, ஓட்டுசுட்டான், துணுக்காய், மாந்தை கிழக்கு, கரைத்துறைப்பற்று, மற்றும் வெலிஓயா ஆகிய 6 பிரதேச செயலக பிரிவுகளிலும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.

இந்தக் குடிநீர் வழங்கலுக்காக அனர்த்த முகாமைத்துவ அமைச்சில் இருந்து தொடர்ந்தும் நிதி கிடைக்கப்பெறும் என அவர் மேலும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X