2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

பார்வையற்ற 20 பேருக்கு வெள்ளைப்பிரம்பு வழங்கிவைப்பு

Kanagaraj   / 2014 பெப்ரவரி 08 , மு.ப. 07:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

வன்னி விழிப்புணர்வற்றோர் சங்கத்தினால் பார்வையற்ற 20 பேருக்கு புலம்பெயர் நாட்டில் இயங்கி வரும் 'நம்பிக்கை ஒளி' என்ற அமைப்பின் ஊடாக வெள்ளைப்;பிரம்புகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்நிகழ்வு வன்னி பார்வையற்றோர் சங்கத்தின் தலைவர் எஸ்.ரூபராஜ் தலைமையில் பரந்தனில் அமைந்துள்ள வன்னி விழிப்புணர்வற்றோர் சங்க அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.

இந்நிகழ்வில் முன்னாள் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபரும் மகாதேவ சைவ சிறுவர் இல்லத்தின் தலைவர் தி.இராஜநாயகம், இலங்கை மெதடிஸ்த திருச்சபையின் பங்குத்தந்தை றிச்சாட் ஆகியோர் கலந்துகொண்டு சுயமாக நடமாடக்கூடிய 20பேருக்கு வெள்ளைப்பிரம்புகளை வழங்கினார்கள்.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .