2025 ஜூலை 23, புதன்கிழமை

கண்டாவளையில் 2,000 ஏக்கர் நெற்செய்கை அழிவு

Menaka Mookandi   / 2014 ஜனவரி 23 , மு.ப. 09:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி, கண்டாவளைப் பகுதியில் இவ்வாண்டு மேற்கொள்ளப்பட்ட காலபோக நெற்செய்கையில், மழையின்மையினால் நிலவிய வறட்சி காரணமாக சுமார் 2000 ஏக்கர் நெற்செய்கை அழிவடைந்துள்ளதாக கண்டாவளை விவசாய அமைப்பு இன்று (23) தெரிவித்தது. 

கிளிநொச்சி, கண்டாவளை கிராம அலுவலர் பிரிவின் கீழுள்ள பதினொரு கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் இவ்வாண்டு காலபோக நெற்செய்கையினை மேற்கொண்டிருந்தனர்.

இருந்தும் அவர்களின் நெற்செய்கைக்கேற்ற பருவமழை வீழ்ச்சி இவ்வருடம் கிடைக்காமையினால் அவற்றில் 85 சதவீதமான நெற்செய்கை அழிவடைந்துள்ளது.

இந்த அழிவினால் விவசாயிகளின் வாழ்வாதாரங்கள் பெருமளவிற்குப் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைப்பு மேலும் தெரிவித்தது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .