2025 ஜூலை 23, புதன்கிழமை

நானாட்டான் விவகாரம்: தடுத்து வைக்கப்பட்ட 21 பேருக்கும் பிணை

Kanagaraj   / 2013 டிசெம்பர் 23 , பி.ப. 02:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார் நானாட்டான் பிரதேசச் செயலகம் மீது தாக்குதல் மேற்கொண்டதாக குற்றஞ்சாட்டப்பட்ட 21 பேருக்கும் மன்னார் நீதவான் நீதிமன்றத்தினால் பிணை வழங்கப்பட்டுள்ளது.

இவர்களை மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் இன்று திங்கட்கிழமை ஆஜர்படுத்திய போதே அவர்களுக்கு மன்னார் நீதவான் ஆனந்தி கனகரட்ணம் பிணை வழங்கினார்.

நானாட்டான் பிரதேசச் செயலகம் மீது கடந்த 9 ஆம் திகதி திங்கட்கிழமை தாக்குதல்களை மேற்கொண்டதாக கூறி பொன்தீவு கண்டல் கிராமத்தைச் சேர்ந்த 65 பேரை முருங்கன் பொலிஸார் கைது செய்திருந்தனர்.

கைது செய்யப்பட்ட 65 பேரையும் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட போது 18 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டதோடு ஏனைய 47 பேரும் பிணை விடுவிக்கப்பட்டனர்.

மேலும் முருங்கன் பொலிஸாரினால் தேடப்பட்டு வந்த மூவர் மன்னார் பொலிஸில் சரணடைந்தனர். அந்த  மூவர் உட்பட 21 பேரும் நீதிமன்ற உத்தரவின் பேரில்  இன்று திங்கட்கிழமை வரையிலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

 இவர்கள் 21 பேரும் இன்று திங்கட்கிழமை மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டபோது தலா 10 ஆயிரம் ரூபாய் காசுப்பிணையிலும் 50 ஆயிரம் ரூபாய் பெருமதியான சரீரப்பிணையிலும் செல்ல நீதவான் அனுமதித்தார்.

பிணையில் விடுவிக்கப்பட்ட 21 பேரையும் ஜனவரி மாதம் 20 ஆம் திகதி மன்றில் அஜராகுமாறும் நீதவான் உத்தரவிட்டார்.

இவர்கள் 21 பேர் சார்பாகவும் சிரேஷ்ட சட்டத்தரணி அன்ரன் புனித நாயகம் உட்பட சட்டத்தரணிகளான பிரிமூஸ் சிறாய்வா, ஜோன்தாசன் துசித் ,எஸ்.ஜெபநேசன் லோகு ஆகியோர் மன்றில் ஆஜராகியிருந்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .