2025 ஜூலை 29, செவ்வாய்க்கிழமை

வடக்கில் 21,281 தேசிய அடையாள அட்டைகள் விநியோகம்

Menaka Mookandi   / 2013 செப்டெம்பர் 19 , மு.ப. 08:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரத்தினம் கபில்நாத்

வட மாகாண சபைத் தேர்தலில் வாக்களிப்பதற்கு அடையாள அட்டை இல்லாதவர்களுக்கு சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தல் கண்காணிப்பு அமைப்பான கபே அமைப்பினால் நடத்தப்பட்ட நடமாடும் சேவையின் மூலம் 21,281 தேசிய அடையாள அட்டைகள் விநியோகிக்கப்பட்டுள்ளன என கபே அமைப்பின் தேசிய அமைப்பாளர் அகமட் மனாப் தெரிவித்தார்.

வட மாகாண சபைத் தேர்தலில் வாக்களிக்க தகுதியுள்ள வாக்காளர்கள் மற்றும் பிரஜைகளுக்கு அடையாள அட்டையை பெற்றுக்கொடுக்கும் நடமாடும் சேவையை வட மாகாணத்தில் பல பிரதேச செயலாளர் பிரிவுகளில் ஆட்பதிவு திணைக்களத்துடன் இணைந்து மேற்கொண்டிருந்தோம்.

இதன் மூலம் எமக்கு 21,282 தேசிய அடையாள அட்டைக்கான விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றிருந்தன. அத்துடன் தேர்தலில் வாக்களிப்பதற்கு அனுமதிக்கப்படும் 8 வகையான அடையாள அட்டைகளில் இலகுவாக பெறக்கூடிய தற்காலிக அடையாள அட்டைகளையும் பெறுவதற்காக நடமாடும் சேவையை மேற்கொண்டிருந்தோம்.

எனினும் சில அரசியல்வாதிகள் எம் மூலம் பெறப்பட்ட விண்ணப்பபடிவங்களுக்கான அடையாள அட்டைகள் வழங்கப்படவில்லை என தெரிவித்து வருகின்றனர். ஆனால் ஆட்பதிவு திணைக்களம் எமது அமைப்பினூடாக கிடைக்கப்பெற்ற விண்ணப்பங்களுக்கான அடையாள அட்டைகளை இரவு பகலாக பணிபுரிந்து செய்து முடித்துள்ளனர்.

அந்தவகையில் நேற்று வரையுமான காலப்பகுதிக்குள் முடிவடைந்த அடையாள அட்டைகளை துரித கதியில் கிடைக்கக்கூடிய விதத்தில் உரியவர்களுக்கு தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

அத்துடன் எஞ்சியுள்ள 5,277 அடையாள அட்டைகளையும் இன்று கபே அமைப்பானது ஆட்பதிவு திணைக்கள் அதிகாரிகளின் துணையுடன் வட மாகாணத்தில் உள்ள மாவட்ட செயலகங்களுக்கும் பிரதேச செயலகங்களுக்கும் வழங்கி கிராம சேவகர் ஊடாக உரியவர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுத்துள்ளது' என அவர் மேலும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .