2025 ஜூலை 23, புதன்கிழமை

அனர்த்தங்களினால் மன்னாரில் 26,000 விவசாயிகளும் 9,000 மீனவர்களும் பாதிப்பு

Suganthini Ratnam   / 2013 டிசெம்பர் 24 , மு.ப. 08:57 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.றொசேரியன் லெம்பேட்


இந்த வருடத்தில் இதுவரையில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தங்களினால் மன்னார் மாவட்டத்தில் 26,000 விவசாயிகளும் 9,000 மீனவர்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயத் திணைக்கள, கடற்றொழில் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த  விவசாயிகளும்  மீனவர்களும்; எதிர்நோக்கிவருகின்ற பிரச்சினைகள் தொடர்பில் ஆராயும் கூட்டம் மன்னார் மாவட்டச் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.  இதன்போதே இவர்கள் மேற்கண்டவாறு கூறியுள்ளனர்.

கைத்தொழில் முதலீட்டு அமைச்சர் ரிசாட் பதியுதீனின்  தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளினதும் மீனவர்களினதும் பிரச்சினைகள் ஆராயப்பட்டுள்ளன.

மழை இல்லாமையால் விவசாயிகள் எதிர்நோக்கிவருகின்ற பிரச்சினைகள் தொடர்பிலும் மாற்றுப்பயிர்களை பயிரிடுவதிலுள்ள பிரச்சினைகள் தொடர்பிலும் இதன்போது ஆராயப்பட்டுள்ளன.

இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கும் மீனவர்களுக்கும் நஷ்டஈடும் பாதிப்பு நிவாரணமும் வழங்குவதற்கான தீர்மானமும் இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளது.

இந்தக் கூட்டத்தில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் எம்.வை.எஸ்.தேசப்பிரிய, மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி ஸ்ரான்லி டி மேல், கடற்றொழில் மற்றும் விவசாயத் திணைக்கள அதிகாரிகள், திடீர் அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .