2025 ஜூலை 17, வியாழக்கிழமை

கண்டாவளையில் 2,649 புதிய வீடுகள்

Menaka Mookandi   / 2014 ஜூலை 30 , மு.ப. 07:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி மாவட்டம் கண்டாவளைப் பிரதேச செயலகப் பிரிவில் 2,649 வீடுகள் புதிதாக நிர்மாணித்துக் கொடுக்கப்பட்டுள்ளதாக பிரதேச செயலக புள்ளி விபரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கண்டாவளைப் பிரதேச செயலக பிரிவில் 2010 பெப்ரவரி மாதம் தொடக்கம் மீள்குடியேறுவதற்கு அனுமதியளிக்கப்பட்டது. இதனையடுத்து இப்பிரதேச செயலகப் பிரிவிலுள்ள 16 கிராம அலுவலர் பிரிவுகளிலும் 7,731 குடும்பங்களைச் சேர்ந்த 24,692 பேர் மீள்குடியேறினார்கள்.

இவர்களுக்கான வீட்டுத் திட்டங்கள் 2010ஆம் ஆண்டு முதல் ஆரம்பிக்கப்பட்டு படிப்படியாக மேற்கொள்ளப்பட்டு வந்தன.

அந்தவகையில், நேப் திட்டத்தின் கீழ் 1,169 வீடுகளும், யு.என்.கபிரேட் நிறுவனத்தினூடாக 370 வீடுகளும், இந்திய வீட்டுத் திட்டத்தில் 961 வீடுகளும், இந்திய அரசின் மாதிரி வீட்டுத் திட்டத்தில் 61 வீடுகளும், ஓ.எம்.ஐ. நிறுவனத்தினூடாக 50 வீடுகளும், சுவிஸ் அபிவிருத்திக்கான நிறுவனத்தினூடாக 38 வீடுகளும் நிர்மாணித்துக் கொடுக்கப்பட்டுள்ளன.

இதனைவிட, பகுதி திருத்தும் வேலையில் யு.என். கபிரேட் நிறுவனத்தினூடாக 672 வீடுகளும், சுவிஸ் அபிவிருத்திக்கான நிறுவனத்தினூடாக 47 வீடுகளும் திருத்திக் கொடுக்கப்பட்டுள்ளதாக அந்தத் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X