2025 ஜூலை 23, புதன்கிழமை

திருவாசக விழா 29 இல்

Suganthini Ratnam   / 2013 டிசெம்பர் 25 , மு.ப. 05:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரத்தினம் கபில்நாத்

வவுனியா தமிழ்ச் சங்கம் நடத்தும் திருவாசக விழா எதிர்வரும் 29ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணியிலிருந்து  வவுனியா ஆதிவிநாயகர் ஆலய பாலாம்பிகை மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

தமிழ்ச் சங்கத் தலைவர் தமிழருவி த.சிவகுமாரன் தலைமையில் நடைபெறவுள்ள  இந்த விழாவில் மங்கள விளக்கை  தம்பையா சிவபாலன் – மனோரஞ்சிதம் தம்பதியர் ஏற்றிவைப்பர். திருவாசகத்தினை க.குலேந்திரன் ஓதுவார். தமிழ் வாழ்த்தினை வவுனியா, இலங்கைத் திருச்சபை தமிழ் மகா வித்தியாலய இசைத்துறை ஆசிரியை  கணேசநாதன் தாட்சாயணி பாடுவார். தொடக்கவுரையினை காரைநகர் மணிவாசகர் சபையின் தலைவர், பண்டிதர் மு.சு.வேலாயுதபிள்ளை நிகழ்த்துவார்.

சிறப்பு நிகழ்ச்சியாக 'நான் கலந்து பாடுங்கால்' என்னும் மகுடத்தில் இடம்பெறும் கருத்தரங்கத்தில் 'விலங்கு மனம்' எனும் பொருளில் சிவகஜனும், 'சித்தம் அழகியர்' எனும் பொருளில் தமிழ்மணி கே.கே.அருந்தவராஜாவும், 'அடியரிற் கூட்டிய அதிசயம்' எனும் பொருளில் கவியெழில் த.நிறைமதியும் 'வான்கருணை வள்ளல்' எனும் பொருளில் ல.சதீஸ்குமாரும் 'யார் கொலோ சதுரர்' எனும் பொருளில் சி.வரதராஜனும் 'புகழில் திகழும் அழகன்' எனும் பொருளில் சொல் வேந்தன் செ.ஸ்ரீநிவாசனும் கருத்துரைகளை வழங்கவுள்ளனர்.

இந்த விழாவில் திருவாசகத் திருமுறைக்குத் தொண்டாற்றிவரும் கலாபூசணம் வை.செ.தேவராசாவும் நாதஸ்வர வித்துவான் கலாபூசணம் அ.பாலச்சந்திரனும் (சுதந்திரன்) தமிழ்ச் சங்கத்தால் கௌரவிக்கப்படவுள்ளார்கள்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .