2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

காலாவதியான பொருட்கள் விற்பனை; 23 வர்த்தகர்களுக்கு அபராதம்

George   / 2014 ஒக்டோபர் 18 , மு.ப. 09:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஆர்.ரஸ்மின்

காலாவதியான மற்றும் அதிக விலைகளில் பொருட்களை விற்பனை செய்த குற்றச்சாட்டில் வழக்கு தொடரப்பட்ட வர்த்தகர்களை குற்றவாளியாக இணங்கண்ட முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றம் அபராதப் பணத்தை செலுத்துமாறும் வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளது.

முல்லைத்தீவு நகர் பகுதிகளில் அண்மையில் திடீர் பரிசோதனைகளை மேற்கொண்ட பொதுசுகாதார பரிசோதகர்கள் காலாவதியான வாசனைத்திரவியங்கள், உணவுப்பொருட்கள் என்பனவற்றை விற்றமை. விலைப்பட்டியல் காட்சிப்படுத்தாமை மற்றும் பொருட்களை  அதிகூடிய விலைக்கு விற்பனை செய்தமை தொடர்பில் 23 வர்த்தகர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்துள்ளனர்.

குறித்த வழக்கு விசாரணைகள் வியாழக்கிழமை முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தில் இடம்பெற்றது. இதன்போது குறித்த 23 வர்த்தகர்களையும் குற்றவாளியாக இணங்கண்ட முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜா 23 வர்த்தகர்களுக்கும் அபராதத் தொகையை செலுத்துமாறு உத்தரவிட்டுள்ளார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .