2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

மாங்குளம் விபத்தில் 5 பேர் பலி: ஐவர் காயம்

Kanagaraj   / 2014 பெப்ரவரி 11 , மு.ப. 02:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரொமேஷ் மதுசங்க, சுப்பிரமணியம் பாஸ்கரன், நா.நவரத்தினராசா

ஏ-9 வீதியில் கிளிநொச்சிக்கும் மாங்குளத்திற்கும் இடையில் 233 ஆம் மைற்கல் பகுதியில் வானொன்றும் டிரக் வண்டியொன்றும் மோதி இன்றுக்காலை விபத்துக்குள்ளானதில் ஆகக் குறைந்தது ஐவர் பலியானதுடன் ஆறு பேர்  படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன், குறித்த வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக மாங்குளம் பொலிஸார் குறிப்பிட்டனர். இந்த விபத்தில் சசிதரன் பதுமன் (05), சசிதரன் யர்மிதா (07), சோதிலிங்கம் மிதீபன் (35), சின்னத்துரை பரமேஸ்வரி (75), சின்னத்துரை சிவனேஸ்வரன் (49) என்பவர்களே உயிரிழந்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்தனர்.

இவர்களின் சடலம் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.
அத்துடன், சசிதரன் சர்மிளா (30) சிவனேசன் செந்தூரி (12), சிவனேசன் கபினா (08), சிவனேசன் தர்மினா (31), ஜெயக்குமார் தயாநிதி (53), சோதிலிங்கம் சஜீவன் (38) ஆகியோர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி பொதுவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சோதிலிங்கம் சஜீவனை தவிர ஏனைய ஐவரும் மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக  மாங்குளம் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .