2025 ஜூலை 30, புதன்கிழமை

மன்னாரில் 6 மாணவர்கள் சுகவீனம் காரணமாக புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவில்லை

Suganthini Ratnam   / 2013 ஓகஸ்ட் 26 , மு.ப. 06:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

இந்தமுறை நடந்து முடிவடைந்த ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் மன்னார் மாவட்டத்திலிருந்து 6 மாணவர்கள் சுகவீனம் காரணமாக தோற்றவில்லை என மன்னார் வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எம்.சியான் தெரிவித்தார்.

இந்தமுறை நடந்து முடிவடைந்த ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைக்கு மன்னார் மாவட்டத்திலிருந்து 1,600 மாணவர்கள் தோற்றியிருந்தனர்.

இந்த நிலையில், இந்த மாணவர்களுக்காக மன்னார் மாவட்டத்தில் 25 பரீட்சை நிலையங்களும் 19 இணைப்பு நிலையங்களும் நிறுவப்பட்டு எவ்வித தடையுமின்றி பரீட்டை நடைபெற்று முடிந்ததாகவும் அவர் கூறினார்.

இதன்போது பொலிஸார் விசேட பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டதுடன்,  ஒவ்வொரு பரீட்சை நிலையங்களுக்கும் 5 விசேட கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர் எனவும் அவர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .