2025 ஜூலை 17, வியாழக்கிழமை

கிளிநொச்சியில் 74 ஆயிரம் பேர் வரட்சியால் பாதிப்பு

Kogilavani   / 2014 ஓகஸ்ட் 13 , மு.ப. 11:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி மாவட்டத்தில் நிலவி வரும் வறட்சியான காலநிலைக் காரணமாக  21 ஆயிரத்து 294 குடும்பங்களைச் சேர்ந்த 74 ஆயிரத்து 834 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்டச் செயலாளர் ரூபவதி கேதீஸ்வரன் புதன்கிழமை (13) தெரிவித்தார்.

இது குறித்த மாவட்டச் செயலாளர் மேலும் தெரிவிக்கையில்,

கண்டாவளைப் பிரதேச செயலகப் பிரிவில் 5762 குடும்பங்களைச் சேர்ந்த 18653 பேரும் பச்சிலைப்பளை பிரதேச செயலகப் பிரிவில் 1649 குடும்பங்களைச் சேர்ந்த 5621 பேரும் கரைச்சிப் பிரதேச செயலக பிரிவில் 7379 குடும்பங்களைச் சேர்ந்த 25900 பேரும் பூநகரிப் பிரதேச செயலக பிரிவில் 6504 குடும்பங்களைச் சேர்ந்த 24660 பேரும் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணங்கள் வழங்குவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம்.

நீர்நிலைகளை தூர்வார்தல், பழுதடைந்த குழாய்க் கிணறுகளைப் புனரமைத்தல், மற்றும் கைவிடப்பட்ட கிணறுகளை புனர்நிர்மாணம் செய்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவுள்ளன.

அத்துடன், கால்நடைகளுக்கும் குடிநீருக்கான வசதிகளை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவுள்ளோம்.

மேலும், இந்த வறட்சியான காலநிலையை அனைவரது ஒத்துழைப்புடனுமே எதிர்கொள்ள முடியும்.

இந்நிலையில், கிளிநொச்சி மாவட்டத்தில் 10 ஆயிரத்து 172 குடும்பங்களைச் சேர்ந்த 44 ஆயிரத்து 319 பேருக்கு குடிநீர் நாளாந்தம் விநியோகிக்கப்பட்டு வருகின்றது.

அனர்த்த முகாமைத்துவ அமைச்சிடமிருந்து கிடைக்கப்பெற்ற 8.5 மில்லியன் ரூபா நிதியைக் கொண்டு, தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு அதிகார சபை மற்றும் பிரதேச சபைகள் உள்ளிட்டவற்றின் மூலம் 62 கிராம அலுவலர்கள் பிரிவுகளுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகின்றன.

அந்தவகையில், கண்டாவளைப் பிரதேச செயலகப் பிரிவில் 2340 குடும்பங்களைச் சேர்ந்த 5159 பேருக்கும் பச்சிலைப்பளை பிரதேச செயலகப் பிரிவில் 1304 குடும்பங்களைச் சேர்ந்த 14273 பேருக்கும் கரைச்சிப் பிரதேச செயலக பிரிவில் 2394 குடும்பங்களைச் சேர்ந்த 9595 பேருக்கும் பூநகரிப் பிரதேச செயலக பிரிவில் 4134 குடும்பங்களைச் சேர்ந்த 15292 பேருக்கும் குடிநீர் வழங்கப்பட்டு வருகின்றது' என அவர் மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X