2025 ஜூலை 30, புதன்கிழமை

'வடக்கில் 85,000 பேருக்கு அடையாள அட்டையில்லை'

Super User   / 2013 ஓகஸ்ட் 29 , மு.ப. 09:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரத்தினம் கபில்நாத், ஏ.எச்.ஏ. ஹுஸைன்

மனித உரிமைகள் நிலையம், கபே இயக்கம், ஆட்பதிவு திணைக்களம் ஆகியன இணைந்து வட மாகாணத்தில் நடத்திய நடமாடும் சேவையில் 41 நாட்களில் 34,705 பேருக்கு தேசிய அடையாள அட்டை மற்றும் பிறப்பு சான்றிதழ்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கபே அமைப்பு இன்று தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் அவர்கள் ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

" மாகாண சபைத் தேர்தல் நெருங்கியுள்ள நிலையில் வட மாகாணத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் நடமாடும் சேவையில் பங்கேற்றுள்ளனர். வட மாகாண பிரதேச மற்றும் மாவட்ட செயலாளர்களின் கோரிக்கைக்கு அமைய இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

இந்த நிலையில், முதல் கட்டத்தில் 12,000 பேருக்கு நிவாரணம் வழங்கப்பட்டது. நடமாடும் சேவை ஆரம்பிக்கப்பட்ட பின் அதற்கு ஏற்பட்ட அதிக கேள்வியை அடுத்து திட்டம் விரிவுபடுத்தப்பட்டது. இந்நிலையில் தேசிய அடையாள அட்டை பெற  20,341 விண்ணப்பங்களும் பிறப்புச் சான்றிதழுக்கு 14,000 அதிகமானவர்களும் திருமண பதிவிற்கு 300ற்கும் அதிகமானவர்களும் விண்ணப்பித்திருந்தனர்.

தேசிய அடையாள அட்டைக்கு விண்ணப்பித்தவர்களில் 9,000 பேருக்கு அடையாள அட்டை பெற்றுக் கொடுக்க ஆட்பதிவு திணைக்களம் உடனடி நடவடிக்கை எடுத்துள்ளது. இதேவேளை யாழ், உடுவில் பகுதியில் 30ஆம், 31ஆம் திகதிகளில் இறுதி நடமாடும் சேவையினை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

வடக்கு பகுதியில் தேசிய அடையாள அட்டை அற்று 85,000 பேர் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ள நிலையில் செப்டெம்பர் 21ஆம் திகதி இடம்பெறும் தேர்தலில் வாக்களிக்க இவர்களுக்கு ஏதாவது ஒரு அடையாள அட்டை இருத்தல் அவசியமாக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட அடையாள அட்டை இல்லாத வாக்காளர்களுக்கு வாக்களிக்க தகுதி கிடைக்காது என்பதுடன் அவ்வாறான நபர்கள் கிராம சேவகர் ஊடாக தற்காலிக அடையாள அட்டை பெற முடியும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .