2025 ஜூலை 16, புதன்கிழமை

30​ஆவது நாளில் பன்னங்கண்டி போராட்டம்

George   / 2017 ஏப்ரல் 20 , மு.ப. 09:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.என்.நிபோஜன்

கிளிநொச்சி, கரைச்சி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பன்னங்கண்டி கிராம மக்கள், காணி உரிமை கோரி ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் நேற்றுடன் 30ஆவது நாளை எட்டியது.

குறித்த பிரதேசத்தில் 1990ஆம் ஆண்டிலிருந்து இந்த மக்கள்  குடியிருந்து வருகின்ற போதும், அவர்கள் குடியிருக்கும் காணி, தனியாருக்குச் சொந்தமானதாக இருப்பதனால் காணி உரிமம் இன்றியே வாழ்ந்து வந்துள்ளனர்.

இதனால், வீட்டுத்திட்டம் உள்ளிட்ட உதவி திட்டங்களை பெறமுடியாது மிகவும் நெருக்கடியான நிலைமைகளில் வாழ்ந்து வருகின்றனர்.

ஏற்கெனவே வறுமையில் வாழ்ந்த மக்களுக்கு, மீள்குடியேற்றத்துக்கு பின்னர்  அரச, அரச சார்பற்ற நிறுவனங்கள் மூலம்  வழங்கப்பட்ட எவ்வித உதவிகளும் கிடைக்காமையினால், அவர்களின் பொருளாதார நிலைமை ​மேலும் மோசமடைந்தது.
இந்நிலையில், தங்களுக்கு காணி உரிமை பெற்றுக்கொடுக்குமாறு கோரி இந்த மக்கள் கவனயீர்ப்பு போராட்டத்தை  ஆரம்பித்தனர்.

30 நாட்களாக தொடர்கின்ற தங்களது போராட்டத்துக்கு  ஊடகங்கள் மாத்திரமே துணையாக இருப்பதுடன்,  அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் வந்து  பார்வையிட்டு செல்வதாகவும் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ள மக்கள் தெரிவிக்கின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X