2025 ஜூலை 16, புதன்கிழமை

'இணைத்தலைவர் என்று சொல்ல வெட்கமாக உள்ளது'

George   / 2017 ஏப்ரல் 17 , மு.ப. 07:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

“மாவட்டத்தினுடைய வளர்ச்சிக்காகவும் , பிரச்சினைகளை சுமூகமாக தீர்ப்பதற்கும் என  உருவாக்கப்பட்டுள்ள மாவட்ட அபிவிருத்திக்குழுக் கூட்டத்தை இரண்டு மாதங்களுக்கு ஒருமுறையாவது நடத்த முடியவில்லை என்பதை எண்ணி நான் வெட்கப்படுகிறேன்” என, வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும்  மாவட்ட அபிவிருத்திக்குழுவின் இணைத்தலைவருமான கே.காதர் மஸ்தான் தெரிவித்தார்.

மன்னார், சிலாவத்துறையில் இரண்டு நாட்களுக்கு முன்னர் இடம்பெற்ற மீள் குடியேற்ற செயலணியின் அபிவிருத்தி தொடர்பான மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

குறித்த சந்திப்பில் மஸ்தான் எம்.பி மேலும் கூறுகையில், “மன்னார் மாவட்டத்தினுடைய அபிவிருத்தியையும் இங்கு ஏற்படும் பிரச்சினைகளையும் பேசுவதற்கு மாவட்ட அபிவிருத்திக்குழு உருவாக்கப்பட்டும். இக்கூட்டத்தை கூட்டுவதற்கு  சில இணைத்தலைவர்களுக்கு நேரமில்லை.

மக்களால் தெரிவுசெய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகளுக்கு மக்களுடைய பிரச்சனைகளை பேசுவதற்கு நேரமில்லை என்றால், பொருத்தமான ஒருவரிடம் பொறுப்பை வழங்கிவிட்டு ஒதுங்கிக்கொள்ளவதே சிறந்ததாகும்.

இனியாவது அபிவிருத்திக்குழு கூட்டம் கூட்டப்பட்டு, மன்னார் மாவட்ட மக்களுடைய பிரச்சினைகளுக்காக ஒரு நாளையாவது ஒதுக்க வேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பாகும்.

மேலும், மக்களுக்கு நிர்வாகம் சார்ந்த தெளிவுகள் போதாமையால் அவர்களை சிலர் ஏமாற்ற நினைக்கலாம். ஆனாலும், மக்களால் தெரிவுசெய்யப்பட்ட நான் அவர்களுக்கு கிடைக்கப்பெறவேண்டியதை அவ்வாறே கிடைக்க செய்வதுதான் என்னுடைய வேலையாக இருக்கும்” என அவர் மேலும் கூறினார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X