2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

'இது எமது நாடென்ற உணர்வு வேண்டும்'

George   / 2016 ஓகஸ்ட் 21 , பி.ப. 07:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.என்.நிபோஜன்

'இது எங்களுடைய நாடு என்ற உணர்வு அனைவருக்கும் இருக்க வேண்டும். எங்களுடைய நாட்டில் பல பிரச்சினைகள் இருக்கிறன. ஆனால், அவை படிப்படியாகத் தீர்க்கப்படும். உருவாக்கப்படுகின்ற அரசியல் யாப்பில் எங்களுடைய பிரச்சினைகள் தீர்க்கப்பட வாய்ப்பிருக்கிறது' என வட மாகாண சபையின் பிரதி அவைத் தலைவர் அன்டனி ஜெகநாதன் தெரிவித்தார்.

 'வேலைப்பளுவுக்கும் பிரச்சினைகளுக்கும் மத்தியில் அமைச்சர் மஹிந்த அமரவீர மற்றும் அவருடைய அமைச்சின் செயலாளர் ஆகியோர் இங்கு வருகை தந்து, இந்த பிரதேசத்தில் „குளத்தை அண்டிய கிராமத்தின் அபிவிருத்தி... எனும் திட்டத்தை ஆரம்பித்து வைத்தமைக்காக முதலமைச்சர் சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்' என்றும் அவர் கூறினார்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை கிளிநொச்சி சாந்தபுரம் கிராமத்தில் கடற்றொழில் நீரியல்வள அமைச்சர் மஹிந்த அமரவீர கலந்துகொண்ட நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

'நான் இங்கு முதலமைச்சரின் பிரதிநிதியாக  வந்திருக்கின்றேன் அவருக்கு சுகயீனம் காரணமாக கொழும்பு சென்றிருக்கின்றார். எனவே, எனக்கு கடிதம் மூலம் தன்னுடைய பிரதிநிதியாக சென்று கலந்துகொண்டு கருத்துரை தெரிவிக்குமாறு கேட்டுக்கொண்டார்' என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .