Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 16, புதன்கிழமை
George / 2017 ஏப்ரல் 09 , மு.ப. 08:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நடராசா கிருஸ்ணகுமார்
கிளிநொச்சி, புதுமுறிப்பு பிரதேசத்தில் இராணுவத்தினர், செங்கல் உற்பத்தியில் ஈடுபடுவதன் காரணமாக, கிராமத்தின் சூழல் பாதிக்கப்பட்டு வருவதாக கிராமத்தின் பொது அமைப்புகள், மாவட்டத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், வடமாகாண சபை உறுப்பினர்கள், கிளிநொச்சி மாவட்டச் செயலாளர், கரைச்சி பிரதேச செயலாளர் ஆகியோரிடம் மனு கொடுத்தும், நேரடியாகவும் முறைப்பாடு செய்துள்ளனர்.
இது குறித்து மக்கள் தமது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளதாவது, “2010ம் ஆண்டுக்குப் பின்னர், புதுமுறிப்பு பாடசாலைக்கு அருகிலும் புதுமுறிப்புக் குளத்தின் அணைக்கட்டுக்கு கீழ்ப்பகுதியிலும் அமைந்துள்ள இராணுவ முகாமில் இருந்து, செங்கல் உற்பத்தியில் இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர்.
இரவு, பகல நேரத்தில் இவர்கள் தொடர்ச்சியாக செங்கற்களை வெளியிடங்களுக்குக் கொண்டு செல்கின்றனர். 2010ம் ஆண்டில் அதிக இராணுவத்தினர் இம்முகாமில் இருந்ததுடன், தற்போது இராணுவத்தினர் குறைக்கப்பட்டு செங்கல் உற்பத்தியும் பயிர்ச்செய்கையிலும் ஈடுபட்டுள்ளனர்.
செங்கல் உற்பத்திக்காக தோண்டப்படும் மண் குழிகளில், ஜெயந்தி நகரிலுள்ள 57ஆவது படைத்தளத்தில் இருந்து, கழிவுப் பொருட்கள் கொண்டு வரப்பட்டு கொட்டப்பட்டு குழிகள் மூடப்படுகின்றன.இதன் காரணமாக, கிராமத்தின் சூழல் பாதிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, புதுமுறிப்பு குளத்தின் கீழ் செங்கல் உற்பத்திக்காக குழிகள் தோண்டப்படுவதன் காரணமாக, குளத்தின் அணைக்கட்டுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.
கிராமத்தின் சூழலையும் குளத்தின் அணைக்கட்டையும் பாதுகாப்பதுடன், இராணுவத்தினரின் செங்கல் உற்பத்தியை தடுத்து நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என, புதுமுறிப்பு பொது அமைப்புகளும் மக்களும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago