Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 02, புதன்கிழமை
George / 2016 ஜூன் 11 , மு.ப. 04:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
கிளிநொச்சி இரணைமடுக்குளத்தின் இபாட் திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்டு வரும் கட்டுமான வேலைகள் உரிய முறையில் முன்னெடுக்கப்படவில்லை என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
கிளிநொச்சி இரணைமடுக்குளத்தின் கீழான நீர்ப்பாசன வாய்க்கால்கள் கழிவு வாய்க்கால்;கள் இபாட் திட்டத்தின் கீழ், தற்போது புனரமைக்கப்பட்டு வருகின்ற போதும் அதன் பணிகள் உரிய முறையில் முன்னெடுக்கப்;;படவில்லை எனவும் இதனை கண்காணிக்கின்ற உப திட்டக்குழுக்கள் அவற்றை உரிய முறையில் கண்காணிப்பதில்லை எனவும் விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
அதாவது, கூடுதலான பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற வேலைகள், தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் உபதிட்டக்குழுக்களின் கண்காணிப்புக்கள் இன்றி மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கடந்த பல ஆண்டுகளாக சேதமடைந்து கட்டுமானங்களும் அழிவடைந்து காணப்பட்ட பகுதிகளில் முன்னெடுக்;கப்பட்டு வரும் இக்கட்டுமானங்களை உரிய முறையில் முன்னெடுக்கவில்லை என்றும் விவசாயிகள் பொதுமக்கள் என்பபலரும் குற்றம்;சாட்டியுள்ளதுடன் இவற்றை உரிய முறையில் கண்காணித்து உரிய முறையில் முன்னெடுப்பதற்கு ஏற்ற வழிவகைகளை உரிய அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
9 hours ago