Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
George / 2016 ஜூன் 23 , மு.ப. 05:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நடராசா கிருஸ்ணகுமார்
இரணைமடுக் குளத்தின் புனரமைப்பு மற்றும் அபிவிருத்தி வேலைகளை, எதிர்வரும் 2017ஆம் ஆண்டுக்குள் முழுமையாக நிறைவு செய்ய எதிர்பார்ப்பதாக கிளிநொச்சி மாவட்ட பிரதி நீர்ப்பாசனப் பணிப்பாளர் நவரத்தினம் சுதாகரன் தெரிவித்தார்.
இபாட் திட்டத்தின் கீழ், சுமார் 3,200 மில்லியன் ரூபாய் செலவில், இரiணைமடுகுளத்துக்கான அபிவிருத்தி மற்றும் புனரமைப்பு வேலைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
'இவ்வாண்டு சிறுபோகத்தினைக் கைவிட்டு, இந்த புனரமைப்பு வேலைத்திட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அடுத்தாண்டு மார்ச் மாதத்துக்குள் அனைத்து வேலைத்திட்டங்களும் முடிக்கப்பட வேண்டும். அந்தவகையில் தற்போது 58 சதவீதமான வேலைகள் பூர்த்தியடைந்துள்ளன' என்று சுதாகரன் தெரிவித்தார்.
'பிரதானமாக, வாய்க்கால் உட்கட்டுமான அபிவிருத்தியுடன் விவசாயிகளுக்கான உற்பத்தியை மேம்படுத்துவதற்கான திட்டம் அமுல்படுத்தப்பட்டு வருகின்றது. இதேபோல், இரணைமடுக் குளத்தின் குளக்கட்டு மேம்படுத்தல் திட்டமும் நடைபெறுகின்றது.
அதேபோன்று ஏற்று நீர்ப்பாசனத்திட்ட வேலைகளை முன்னெடுப்பதற்காக, விவசாயிகளுடன் கலந்துரையாடி, அந்த வேலையை ஒப்பந்தக்காரர்களிடம் ஒப்படைக்கவுள்ளோம்' என்றும் அவர் கூறினார்.
'கடந்த மாதம், கிளிநொச்சி மாவட்டத்தில் பெய்த கடும் மழை காரணமாக, ஒரு மாத காலமாக வேலைகள் தடைபட்டிருந்தன. 12 அடி உயரத்துக்கு இருந்த இரணைமடுக்குளத்தின் நீர்மட்டம், மழை காரணமாக 28 அடியாக உயர்ந்துள்ளது. குளத்தின் நீர் மட்டம் உயர்ந்ததன் காரணமாக குளத்தின் உட்பகுதி வேலைகள் தடைப்பட்டுள்ளன.
தற்போது நீரினை வெளியேற்றிக் கொண்டிருக்கின்றோம். எதிர்வரும் வாரத்தில், குளத்தின் உட்பகுதி வேலைகளைச் செய்யக் கூடியதாகவிருக்கும். குளத்தின் உட்பகுதியில் 15 அடிகள் உயரத்து கற்களை அடுக்கவேண்டும். ஏனைய வேலைகளை அடுத்தாண்டு சிறுபோகத்துக்குள் முடிக்கக்கூடியதாக இருக்கும்' என்று அவர் மேலும் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
5 hours ago