2025 ஜூலை 16, புதன்கிழமை

'இரத்துச் செய்யும் வரை போராட்டம் தொடரும்'

George   / 2017 ஏப்ரல் 10 , மு.ப. 09:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

“வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி இரத்துச் செய்யும் வரை, போராட்டம் தொடரும். இதற்காக அரசியல்வாதிகள் அனைவரும் கட்சிபேதம் இன்றி எங்களுக்கு ஆதரவு வழங்க வேண்டும்” என, மறிச்சுக்கட்டி பகுதியில் போராட்டத்தில் ஈடுபடும் மக்கள் தெரிவித்தனர்.

ஜனாதிபதியின் வர்த்தமானி அறிவித்தலுக்குக் கண்டனம் தெரிவித்து, மறிச்சுக்கட்டி பகுதியில் தொடர்ந்தும் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்ற முஸ்ஸிம் மக்களை, புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் உறுப்பினருமான  எம்.எச்.எம். நவவி, ஞாயிற்றுக்கிழமை (09) சந்தித்தார்.

வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் , மாந்தை பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் சனூஸ் அமைச்சரின் இணைப்பாளர் முஜாஹிர் ஆகியோரும் எம்.பியுடன் விஜயம் செய்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X