2025 ஜூலை 05, சனிக்கிழமை

கொக்குவெளி குடியேற்ற சர்ச்சை: பொதுபல சேனாவின் குற்றச்சாட்டு நிராகரிப்பு

Niroshini   / 2016 ஓகஸ்ட் 06 , மு.ப. 07:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சண்முகம் தவசீலன்

வவுனியா - கொக்குவெளி பகுதியில் வசித்த சிங்கள மக்கள், சுய விரும்பின் பேரிலேயே தமிழர்களுக்கு தமது காணிகளை விற்பனை செய்தபோதிலும் தற்போது அந்த காணிகளுக்கு மீண்டும் உரிமைகோருவதாக தமிழ்த் தேசிக்ய கூட்டமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.

எனினும், காணியை விற்பனை செய்தபோது தமிழ் மக்களிடம் பெற்றுக்கொண்ட பணத்தை கூட மீள வழங்காமல் அமைச்சர்களின் செல்வாக்குடன் குறித்த காணிகளை மீள பெற்றுக்கொள்வதற்கு சில சிங்கள மக்கள் முயற்சிப்பதாக கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

இதனிடையே சமாதானத்துக்கான குடியேற்ற கிராமம் என்ற பெயரில் தமிழ் பெண்களை திருமணம்செய்த சிங்கள படைவீரர்களுக்கான கிராமமொன்றை தமிழ் மக்களின் காணிகளில் அரசாங்கம் நிர்மாணிதுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

கொக்குவெளியில் இவ்வாறு இராணுவத்தால் காணிகள் கையகப்படுத்தப்படுதால், அந்த பகுதியில் தமக்கு சொந்தமான காணியை தமிழர் ஒருவர் வேறு சில தமிழர்களுக்கான குடியேற்றத்திட்டத்துக்காக வழங்கியுள்ளதாக சிவசக்தி ஆனந்தன் கூறியுள்ளார்.

இந்த விடயம் தனிப்பட்ட நபர் சார்ந்தது எனவும் தமிழ் தேசிய கூட்டமைப்பு இந்த சம்பவத்துடன்தொடர்புபடவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கொக்குவெளி பகுதியிலுள்ள சிங்கள மக்களுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அச்சுறுத்தல் விடுத்து, அங்கிருந்து அவர்களை வெளியேற்ற முனைவதாக பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலபொடஅத்தே ஞானசார தேரர் குற்றஞ்சாட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .