2025 ஜூலை 07, திங்கட்கிழமை

400 குடும்பங்களுக்கு பயிர்ச் செய்கை விதைகள் நாளை வழங்கப்படும்

George   / 2016 செப்டெம்பர் 29 , மு.ப. 05:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

ஐ.சி.ஆர்.சி நிறுவனத்தால், கிளிநொச்சி அக்கராயனைச் சேர்ந்த 400 குடும்பங்களுக்கு வாழ்வாதாரப் பயிர்ச் செய்கைக்கான நிலக்கடலை, நெல் என்பன நாளைய தினம் (30) வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  

அது தொடர்பான விளக்கமளிப்புக் கூட்டம் கிராம அலுவலர் பசுபதி சபாரட்ணம் தலைமையில் அக்கராயனில் புதன்கிழமை (28)  நடைபெற்றது.

இந்நிகழ்வில் ஐ.சி.ஆர்.சி நிறுவனத்தின் கிளிநொச்சி மாவட்ட இணைப்பாளர் டி.துஷ்யந்தன் மற்றும் அக்கராயன் கமநலசேவை அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.சிவாஜி மற்றும் விவசாயப் போதனாசிரியர்கள் கலந்துகொண்டு பயிர்ச்செய்கையில் ஈடுபடவுள்ளவர்களுக்கான விளக்கங்களையும் அறிவுறுத்தல்களையும் வழங்கினர்.

நாளைய தினம் அக்கராயன் கமநலசேவை நிலையத்தில் வைத்து, 329 பேருக்கு நிலக்கடலையும் 71 பேருக்கு நெல் என்பன வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .