Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 30, திங்கட்கிழமை
Niroshini / 2016 ஜனவரி 26 , மு.ப. 09:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நவரத்தினம் கபில்நாத்
வவுனியா மாவட்டத்தில் வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்குட்பட்ட பிரதேசத்தில் 87 கிலோ மீற்றர் வீதி திருத்தம் செய்யப்பட வேண்டியுள்ளதாக வவுனியா அபிவிருத்திகுழு கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வவுனியாவில் வீதி அபிவிருத்தி அதிகார சபைக்குட்பட்ட பகுதிகளில், திருத்தம் செய்யப்படவேண்டிய வீதி தொடர்பாக கேட்டபோதே அவ் அதிகாரசபையின் அதிகாரியொருவர் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
வவுனியாவில் இருந்து மன்னார் செல்லும் வீதி மற்றும் நெளுக்குளத்தில் இருந்து செட்டிகுளம் செல்லும் வீதியும் இவ்வாறு திருத்தம் செய்யவேண்டியுள்ளதாக தெரிவித்தார்.
இதேவேளை, இவ் வீதி தொடர்பாக வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பணிப்பாளருடன் கலந்துரையாடுவதாக அபிவிருத்திகுழுவின் இணைத்தலைவர்களில் ஒருவரான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago