2025 ஜூலை 16, புதன்கிழமை

'கிளிநொச்சி பொருளாதார மத்திய நிலையம் விரைவில் இயங்கும்'

George   / 2017 ஏப்ரல் 10 , மு.ப. 08:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

கிளிநொச்சி பொருளாதார மத்திய நிலையம் விரைவில் இயங்க உள்ளதாக கிளிநொச்சி, கரைச்சி பிரதேச செயலாளர் கோ.நாகேஸ்வரன் தெரிவித்தார்.

கிளிநொச்சி பொருளாதார மத்திய நிலையம் தொடர்பாக கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் ஞாயிற்றுக்கிழமை இதனைக் கூறினார்.

அவர் தொடர்ந்து கூறுகையில், “பொருளாதார மத்திய நிலையம் அமைக்கப்பட்டு மூன்றாண்டுகள் கடந்த நிலையிலும் இயங்காதுள்ளது. இதனை இயங்க வைப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதுவரை 42 பேர் பதிவுகளை மேற்கொண்டுள்ளனர். பொருளாதார மத்திய நிலையம் இயங்கத் தொடங்கும்போது, மாவட்ட விவசாயிகள் தமது உற்பத்திப் பொருட்களை சந்தைப்படுத்த முடியும்.

கிளிநொச்சி மாவட்டம் ஒரு விவசாய என்பதன் அடிப்படையில் விவசாயிகள் பொருளாதார மத்திய நிலையத்தைப் பயன்படுத்தி தமது வாழ்வாதாரத்தினை உயர்த்திக் கொள்ள முடியும்.

அதனடிப்படையில் பொருளாதார மத்திய நிலையத்தினை இயங்க வைப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளோம்” என்றார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X