Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 16, புதன்கிழமை
George / 2017 ஏப்ரல் 10 , மு.ப. 09:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நடராசா கிருஸ்ணகுமார்
கிளிநொச்சி, கரைச்சி, பெரிய பரந்தன் மற்றும் கண்டாவளை, குமரபுரம் ஆகிய கிராமங்களில் குழாய்க் கிணறுகளை உருவாக்கி, நெற்செய்கையில் சிலர் ஈடுபடுவது தொடர்பில், விவசாயிகள் விசனம் தெரிவிக்கின்றனர்.
கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், மாவட்ட விவசாயக் குழுக் கூட்டம் என்பவற்றில், “வயல் நிலங்களில் குழாய்க் கிணறுகள் அமைப்பது தடுக்கப்பட வேண்டும். கடும் வரட்சி ஏற்பட்டு தவிர்க்க முடியாத காரணங்களினால் குழாய்க் கிணறுகள் அமைக்கப்படும் போது அவை பின்பு பாதுகாப்பானதாக மூடிப் பயன்படுத்தப்பட வேண்டும்” என, அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன், “குழாய்க் கிணறுகள் அமைக்கப்படும் போது மாவட்டச் செயலகம், நீர்ப்பாசனத் திணைக்களம், கமநல சேவை நிலையம் என்பவற்றில் அனுமதி பெற வேண்டும்” என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பெரிய பரந்தனிலும் குமரபுரத்திலும் குழாய்க் கிணறுகளைப் பயன்படுத்தி நெற்செய்கையினை மேற்கொள்வதன் காரணமாக, திறந்த கிணறுகளின் நீர் மட்டம் குறைவடைவதாகவும் எதிர்காலத்தில் இக்கிராமங்களில் குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்பட்டு விடும் எனவும் சுட்டிக் காட்டப்படுகின்றது.
இது தொடர்பாக கருத்துத் தெரிவித்த பிரதி நீர்ப்பாசனப் பணிப்பாளர் நவரத்தினம் சுதாகரன், “குமரபுரம் பகுதி இரணைமடுக்குளப் புனரமைப்புப் பணிகள் முடிவடைந்தவுடன், இரணைமடு நீர்ப்பாசனத் திட்டத்துக்குள் உள்வாங்கப்படவுள்ளது.
இரணைமடு சிறுபோக காலங்களில் கழிவு நீரில் குமரபுரம் விவசாயிகள் நெற்செய்கையில் ஈடுபடுவது வழமை. ஆனால், இவ்வாண்டு மிகக்குறைந்த நிலப்பரப்பிலே இரணைமடுக் குளத்தின் கீழான சிறுபோகம் நடைபெறுகின்றது.
ஆனால் குமரபுரம் மக்கள், குழாய்க் கிணறுகளைப் பயன்படுத்தி நெற்செய்கையில் ஈடுபடுவது சட்டத்துக்கு முரணானது. நீண்ட காலம் தொடர்ந்தால் குமரபுரம் கிராமத்தை அழிவுக்குள் கொண்டு சென்று விடும்.
குழாய்க் கிணறுகளை நெற்பயிர்ச் செய்கைக்குப் பயன்படுத்த முடியாது என்பது ஒரு நடைமுறையில் உள்ள நிலையில், நிலத்தடி நீருக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் குமரபுரம் பகுதியில் குழாய்க் கிணறுகளைப் பயன்படுத்தி நெற்செய்கை இடம்பெறுகின்றது. இதனை அனுமதிக்க முடியாது” என்றார்.
இதேவேளை, பெரிய பரந்தன் கமக்கார அமைப்பின் முக்கிய பொறுப்பில் உள்ளவரே குழாய்க் கிணற்றினைப் பயன்படுத்தி நெற்செய்கையில் ஈடுபடுவதாக, பெரிய பரந்தன் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago