Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
Niroshini / 2016 செப்டெம்பர் 10 , மு.ப. 05:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நடராசா கிருஸ்ணகுமார்
முல்லைத்தீவு மாவட்டத்தின் கசிப்பு காய்ச்சலை இல்லாது செய்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்தார்.
மாவட்டச் செயலகத்தில் வியாழக்கிழமை (08) நடைபெற்ற சிவில் பாதுகாப்புக் குழுக் கூட்டத்தின் நிறைவில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
“முல்லைத்தீவு மாவட்டத்தில் கசிப்பை இல்லாதொழிப்பதற்கு இறுக்கமான முடிவுகளை சிவில் பாதுகாப்புக் குழுக்கூட்டத்தின் ஊடாக மேற்கொண்டுள்ளோம். கசிப்பு மட்டுமல்ல மாவட்டத்தில் நடைபெறுகின்ற சட்டவிரோத மணல் அகழ்வு, மரங்களை வெட்டி எடுத்துச் செல்லுதல், கால்நடைகளைக் கடத்துதல் உட்பட சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்கு சிவில் பாதுகாப்புக் குழுக் கூட்டத்தின் ஊடாக நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம்.
பிரதேச, கிராம மட்டங்களில் சிவில் பாதுகாப்புக் குழுக்கள் சிறப்பாக செயற்படுகின்றபோது, சட்டவிரோத செயற்பாடுகளைக் கட்டுப்படுத்த முடியும். பொதுமக்கள் கிராம அலுவலருக்குத் தகவல்களை வழங்கி சட்டவிரோத செயற்பாடுகளைக் கட்டுப்படுத்த முடியும்.
கிராம மட்ட பொது அமைப்புகள் சிறப்பாக செயற்படுகின்றபோதுதான் சட்டவிரோத செயற்பாடுகளைக் கட்டுப்படுத்த முடியும். நாம் மேற்கொண்டுள்ள முயற்சிகள் காரணமாக மாவட்டத்தின் கசிப்பு காய்ச்சுதல் குறைவடைந்து வருவதாகவே அவதானிக்க முடிகின்றது” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
36 minute ago