Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
George / 2016 ஜூன் 23 , மு.ப. 04:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நடராசா கிருஸ்ணகுமார்
கிளிநொச்சி மாவட்டத்தில் மழைக் காலத்தில் கிடைக்கும் நீரின் பெரும் பகுதி வீணாக கடலுக்குச் செல்கின்றது. இவ்வாறு செல்கின்ற நீரை தேக்கிவைப்பதற்காக, மாவட்டத்தின் மேற்குப் பகுதியில் நீரைத் தக்கவைக்கும் திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டியுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட பிரதி நீர்ப்பாசனப் பணிப்பாளர் நவரத்தினம் சுதாகரன் தெரிவித்தார்.
'இதற்காக, எமது திணைக்களத்தின் ஊடாக, சில திட்டங்களை முன்மொழியவுள்ளோம். இதன்மூலம் மாவட்டத்தின் விவசாய அபிவிருத்தி மற்றும் குடிநீர்; பிரச்சனைகளைத் தீர்க்க முடியும்' என்றும் அவர் கூறினார்.
'முடக்கன் ஆறு திட்டம், பூநகரிக்குளத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதன் மூலம், கிளிநொச்சி மாவட்டத்தின் நீர்ப் பற்றாக்குறை தீரும். வன்னேரிக்குளம், குஞ்சுகுளம், திக்காய் ஆகிய பகுதிகளின் உவர்ப் பிரச்சினைகளுக்கு, மண்டைக்கல்லாறு உவர்த்தடுப்பணை அமைப்பதன் மூலம் தீர்வைக் காணலாம்.
பூநகரியின் வடக்குப் பகுதியில் உவர் நீர் உள்வராமல் தடுப்பணைகளை அமைத்திருக்கின்றோம். இருப்பினும், பூநகரி மேற்குப் பகுதியில் இதனைச் செய்ய முடியாத நிலையிலுள்ளோம். எமது ஆளுகைக்குள் அப்பகுதிகள் இல்லாததன் காரணமாக அதனை நடைமுறைப்படுத்த முடியாமலுள்ளோம்' என்று அவர் மேலும் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
04 Jul 2025
04 Jul 2025